என் மலர்

  நீங்கள் தேடியது "Younglady"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார்.
  • இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருப்பது தெரியவந்தது

  கோவை

  கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

  நள்ளிரவு

  இந்தநிலையில் இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது கணவர் வேலைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் இளம்பெண் தினசரி நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார்.

  இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினசரி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். இதனால் இளம்பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவி எங்கே வேலை செய்கிறார். என்ன வேலைக்கு செல்கிறார் என்பதை கண்காணிக்க திட்டமிட்டார்.

  பல ஆண்களுடன் உல்லாசம்

  அதன்படி அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது இளம்பெண் தனது கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதும், அவருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது ெதரிய வந்தது.

  இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வருவது தெரிய வந்தது.

  ஓட்டம்

  இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

  இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேகலா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார்
  • கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.

  கோவை

  கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கதிரேஷ். இவரது மனைவி மேகலா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார். மொபட் எட்டிமடையில் உள்ள தியேட்டர் அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் மேகலாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர்.

  பின்னர் அவரது மொபட்டின் சாவியை பறித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த மேகலா இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

  ஆனைமலை,

  பொள்ளாச்சி பில்சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  இளம்பெண்ணும், அவரது வீட்டின் அருகே வசித்தும் வரும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

  நேற்று இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியான பெற்றோர் அக்கம்பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

  ஆனால் எங்குதேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் மகளை போனில் தொடர்பு கொண்டார். அப்போது இளம்பெண் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாக கூறினார்.

  இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

  ஆனைமலை

  பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

  இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

  இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

  இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார். இளம்பெண்ணின் கணவர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
  • இளம்பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

  கோவை

  கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 26). கூலி தொழிலாளி.

  இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும், அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  சம்பவத்தன்று அஜித்குமார் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

  அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும், அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31). டிரைவர். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

  இந்த நிலையில் சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

  சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

  இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எந்திரிக்கவில்லை. அவரது வீட்டுக்கு சென்ற அவரது நண்பர் அதனை பார்த்து சங்கர் எழுப்பி விட்டார்.

  அப்போது அவர் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.
  • இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

  கோவை

  பொள்ளாச்சியை சேர்ந்தவர் சக்திவேல்(40). இவரது மனைவி சரண்யா (37).இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.


  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரண்யாவை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
  • அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

  நீலாம்பூர்,

  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

  இதனால் அதிர்ச்சியான அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.இதுகுறித்து இளம்பெண் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.

  அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தனர். விசாரணையில், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பதும், டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

  கோவை

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 33). பெயிண்டர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை அகதியாக வந்தார்.

  அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

  இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் பிரதீபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.

  இதனால் பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

  இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ அடத்துக்கு வந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
  • நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.

  கோவை:

  கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த 25 வயது வாலிபர். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பேசாமல் இருந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் வாலிபரை தொடர்பு கொண்டார்.

  அப்போது பேசிய அவர் நாம் கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும். நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.

  இதனையடுத்து இளம்பெண் ராஜவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து சந்திக்கலாம் என கூறினார். அதற்கு வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து வாலிபர் இளம்பெண் அழைத்த லாட்ஜிக்கு சென்றார்.

  அங்கு 2 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் இளம்பெண்ணின் ஆண் நண்பர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் வாலிபரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி விட்டு இளம்பெண்ணுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

  இது குறித்து வாலிபர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

  கோவை:

  கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  இதனையடுத்து அந்த பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அப்போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார்.

  அப்போது அந்த வாலிபருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

  இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்த சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், செல்போன், கல்லூரி சான்றிதழ் எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.
  • முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர்.

  கோவை:

  கோவை குனியமுத்தூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

  அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

  நான் கல்லூரி படித்து முடித்து உள்ளேன். நான் எனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது தியாகி குமரன் வீதியை ேசர்ந்த போட்டோகிராபர் குலாம் தஸ்தகீர்(35) என்னை பார்த்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எனது தந்தையை அடிக்கடி தொடர்பு கொண்டு என்னை பெண் கேட்டார்.

  அப்போது எங்களுக்கு இடைேய பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு எனது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ஸ்மாட் வாட்ச், செல்போன், கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.

  நாங்கள் பெங்களூரில் உள்ள எனது காதலனின் சகோதரி வீட்டிற்கு சென்றோம். பின்னர் ஆந்திர மாநிலம் விகோடாவுக்கு சென்று 4 பேர் முன்னிலையில் திருமணம் செய்தோம். இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள எனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தோம்.

  அப்போது தான் தெரிந்தது எனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது தெரிய வந்தது. முதல் திருமணத்தை மறைத்து ஏன் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கேட்டதால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்னை எனது கணவர் அடித்து உதைத்து கொடுமைபடுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், சவுந்திரவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்