கோவையில் இளம்பெண் மாயம்

சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
கோவையில் இளம்பெண் மாயம்
Published on

கோவை

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சக்திவேல்(40). இவரது மனைவி சரண்யா (37).இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து சக்திவேல் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரண்யாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com