கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்- காதலனை நண்பர்களை வைத்து தாக்கிய இளம்பெண்

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்- காதலனை நண்பர்களை வைத்து தாக்கிய இளம்பெண்
Published on

கோவை:

கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த 25 வயது வாலிபர். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பேசாமல் இருந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் வாலிபரை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய அவர் நாம் கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும். நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.

இதனையடுத்து இளம்பெண் ராஜவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து சந்திக்கலாம் என கூறினார். அதற்கு வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து வாலிபர் இளம்பெண் அழைத்த லாட்ஜிக்கு சென்றார்.

அங்கு 2 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் இளம்பெண்ணின் ஆண் நண்பர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் வாலிபரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி விட்டு இளம்பெண்ணுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து வாலிபர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com