கோவையில் காதலி திருமணம் செய்ய மறுப்பு- வாலிபர் தற்கொலை

இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இளம்பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.
கோவையில் காதலி திருமணம் செய்ய மறுப்பு- வாலிபர் தற்கொலை
Published on

கோவை

கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 26). கூலி தொழிலாளி.

இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும், அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று அஜித்குமார் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும், அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31). டிரைவர். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எந்திரிக்கவில்லை. அவரது வீட்டுக்கு சென்ற அவரது நண்பர் அதனை பார்த்து சங்கர் எழுப்பி விட்டார்.

அப்போது அவர் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com