என் மலர்
நீங்கள் தேடியது "chain snaching"
- மேகலா தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார்
- கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.
கோவை
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கதிரேஷ். இவரது மனைவி மேகலா (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக மொபட்டில் புறப்பட்டார். மொபட் எட்டிமடையில் உள்ள தியேட்டர் அருகே சென்ற போது அந்த வழியாக மற்றொரு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் மேகலாவின் மொபட்டை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரது மொபட்டின் சாவியை பறித்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த மேகலா இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார்.
- பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்
கோவை
கோவை பி.என்.புதூர் அருகே உள்ள கோகுலம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வானதி(54). சம்பவத்தன்று இவர் ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வாங்கிய துணிகளை காரில் வைப்பதற்காக கொண்டு சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் வானதி கழுத்தில் அணிந்து 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்






