பொள்ளாச்சி அருகே இளம்பெண் திடீர் மாயம்

இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே இளம்பெண் திடீர் மாயம்
Published on

ஆனைமலை,

பொள்ளாச்சி பில்சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இளம்பெண்ணும், அவரது வீட்டின் அருகே வசித்தும் வரும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியான பெற்றோர் அக்கம்பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் எங்குதேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் மகளை போனில் தொடர்பு கொண்டார். அப்போது இளம்பெண் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com