search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confession"

    • நேற்று நம்பி வழக்கம்போல் தனது ஆடுகளை புதுக்கோட்டை அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த செட்டிமல்லன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
    • அப்போது ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக நம்பிக்கும், சங்கிலிமாடனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நம்பி (வயது 70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வந்தார்.

    கொலை

    நேற்று நம்பி வழக்கம்போல் தனது ஆடுகளை புதுக்கோட்டை அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த செட்டிமல்லன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அங்கு நம்பியின் தம்பி உறவுமுறையான ராமநாதபுரத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சங்கிலிமாடன் (30) என்பவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தார். அப்போது ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக நம்பிக்கும், சங்கிலிமாடனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலிமாடன் கத்தியால் நம்பியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    வாலிபர் கைது

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞான்ராஜ் ஆகியோர் சங்கிலிமாடனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மாடு மேய்த்த போது நம்பி திட்டிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சங்கிலிமாடன் கத்தியால் குத்திக்கொன்றதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

    சூலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகள் சக்தி பிரியா (வயது 24).

    இவர் சூலூர் அருகே உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25-ந் தேதி விடுதியில் உள்ள அறையில் இருந்த சக்தி பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவ மாணவி திடீர் தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சக்தி பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவர் யாருடன் கடைசியாக பேசினார் என ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக கிருஷ்ணகிரியில் என்ஜினீயரிங் படித்து வரும் கோகுல் (25) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டுபடித்து வருகிறேன். நானும் சக்தி பிரியாவும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்து வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்தி பிரியா அவரது நண்பர் ஒருவருக்கு பண உதவி செய்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனை நான் கண்டித்தேன்.

    அப்போது எங்களுக்கு இடையே செல்போன் மூலமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சக்தி பிரியா என்னிடம் பேசுவதை குறைத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த நான் சக்தி பிரியாவின் தோழிகளை தொடர்பு கொண்டு அவருடன் பேசாதீர்கள் என கூறினேன். இதுகுறித்து அவர்கள் சக்தி பிரியாவிடம் கூறி உள்ளனர். சம்பவத்தன்று விடுதியில் இருந்த அவர் இதுபற்றி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணையில் முடிவில் போலீசார் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு துண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலன் கோகுலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
    • மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.

    நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    • பணம் தராததால் தாயை அடித்து கொன்றேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • கட்டிலில் பிணமாக கிடந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர்மருங்கூர் கிராமத்தை அடுத்துள்ள பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி (வயது75) கட்டி லில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி னர்.

    கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மூத்த மகன் கொத்தனார் வேலை செய்து வரும் அருள் செல்வத்திடமும் (48) விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீ சார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தாைய அடித்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது தாயார் ஆடு விற்ற பணம், பயிர் இன்சூ ரன்ஸ் பணம் ஆகிவற்றை இளைய மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து வந்தார். எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்பா வின் பெயரில் வங்கியில் இருந்த பணத்தை தாயிடம் தொடர்ந்து கேட்டு வந் ஆனால் அவர் கொடுக்காமல் மறுத்து வந்தார்.

    இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரத்தில் அவரை விறகு கட்டையால் தலையில் அடித்தேன். அதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
    • மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரி பட்டியை சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.

    இந்த நிலையில் அதி காரியப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வசுமதி(25) என்பவருடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர்க ளுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக மணிகண்ட னுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் நண்பருடன் லோகேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் லோகேஸ்வர னின் பின் தலையில் தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே லோகேஸ்வரன் பரிதாப மாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்த னர். பின்னர் மணிகண்ட னையும் பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் தனது மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக அந்த பகுதி யினர் கூறியதால் தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    இதை அடுத்து போலீசார் மணிகண்டனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு இடையே லோகேஸ்வரன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டிசஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாதேஸ்வரன், சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்தபோது, அங்கு உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், 2-வது மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

    திருமணம் ஆன பிறகு நானும், ஷெகனாசும் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு ஷெகனாஷின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த நான், அவரை கண்காணித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதனால் நான், ஷெகனாஷை கண்டித்தேன். இருப்பினும் அவர் அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக நேற்று எனக்கும் ஷெகனாசுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நான், துண்டால் ஷெகனாஷின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் வலியால் அலறி துடித்த ஷெகனாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதையடுத்து நான் அங்கிருந்து சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வரும் அவரது மகள் வீட்டிற்கு சென்று, உனது தாயை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தேன். இதனால் அவரது மகள் கதறி அழுதார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச் சென்று இரவு அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்ட மாதேஸ்வரனை ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடுகளை விற்று மது குடித்ததால் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கினோம் என்று பெற்றோர் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த சரவணன் மது பழக்கத்துக்கு அடிமையா னதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணனை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்தார். இதையடுத்து தவிடன், காளியம்மாள், சங்கன் ஆகிய 3 பேரும் மறவப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மூத்த மகனுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனிக்குடித் தனம் சென்று விட்டார். நான், எனது மனைவி மற்றும் 2-வது மகன் சரவணனுடன் வசித்து வந்தோம். போதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் மது குடித்தார். இதனை கண்டித்ததால் சரவணன் கம்பால் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்தான். பணம் தராத நேரத்தில் செம்மறி ஆடுகளை விற்று மது குடித்து வந்தான். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சினை ஏற்பட்டது.

    கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், தரக்குறைவாக பேசியதோடு எங்களை சரமாரியாக தாக்கினான். அப்போது அங்கு வந்த சங்கனையும் தரக்குறைவான வார்த்தை களால் பேசினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இரும்பு கம்பியால் சரவணனை தாக்கினோம். இதில் அவன் மயங்கி விழுந்தான். குடிபோதையில் சரவணன் தூங்கி இருக்கலாம் என்று சென்று விட்டோம். காலையில் பார்த்தபோது சரவணன் இறந்தது தெரிய வந்தது.

    இவ்வாறு அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    • சுப்பிரமணி கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
    • ஒரு பேக்கரி முன்பு ஸ்டாண்டில் எங்களது வாகனத்தை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தோம்.

    கோவை,

    நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28).

    இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இது குறித்து காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பரை கொலை செய்து விட்டு சரண் அடைந்த சாரங்கபாணியை காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நண்பரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து சாரங்கபாணியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி முன்பு ஸ்டாண்டில் எங்களது வாகனத்தை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தோம்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி ஆட்டோ வாங்குவதற்காக என்னிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். மேலும் சில வாரங்களில் பணத்தை திருப்பி தருவதாக என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் ரூ.20 ஆயிரம் பணத்தை தயார் செய்து அவரிடம் கொடுத்தேன்.

    ஆனால் சுப்பிரமணி பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து நான் பலமுறை அவரிடம் கேட்டும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் சுப்பிரமணி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    நேற்று மாலை 5 மணியளவில் அவர் மது குடித்து விட்டு வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தார். அப்போது நான் அங்கு சென்றேன். பின்னர் அவரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியைஎடுத்து சுப்பிரமணியின் தலையில் தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    போலீசார் நண்பரை கொலை செய்த வழக்கில் சரண் அடைந்த சாரங்கபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • பண்ருட்டி அருகேஓட்டல் தொழிலாளியைகொலை செய்தது ஏன்? நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்.
    • அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை தீவிர விசாரனை நடத்தியது

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (24). இவர் காடாம்புலியூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 29-ந் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வீட்டில் விட்டனர். சிவக்கொழுந்து விபத்தில் அடிபட்டு சாலையில் கிடந்ததாகவும், அவ்வழியே வந்த நாங்கள் ஏற்றி வந்ததாகவும் கூறிச் சென்றனர்   இதையடுத்து சிவக்கொழுந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்துபோனார். ஓட்டல் தொழிலாளியான சிவக்கொழுந்து சாலை விபத்தில் இறக்கவில்லை.

    அதுபோல சாலை விபத்து நடந்ததாக எங்கள் கிராம மக்கள் யாரும் கூறவில்லை. வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற காட்டாண்டிக்குப்பம் 2 வாலிபர்கள்தான் கொலை செய்து இருக்கவேண்டும். அவர்களை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்  பண்ருட்டி போலீஸ் துணைசூப்பிர ண்டுசபியுல்லா உத்திரவின் பேரில், காட்டாண்டிக்குப்பம் கிராமத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்   இது தெரிந்த அந்த 2 வாலிபர்களும் தப்பியோட காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் அபினேஷ், கார்மேகம் என்பது தெரிய வந்தது.

    மேலும், இந்த 2 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

    நாங்கள் இருவரும் காட்டான்டிக்குப்பத்தை சேர்ந்தவர்கள். ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது சிவக்கொழுந்து எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் இரவு நேரங்களில் சந்தித்து மது குடிப்போம்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து நாங்கள் 2 பேரும் மது அருந்தினோம். அப்போது நாங்கள் கொண்டு வந்த ஆட்டுக் கறியை சாப்பிடுவதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவக்கொழுந்து எங்கள் 2 பேரையும் அசிங்கமாக திட்டினான்.

    இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சிவக்கொழுந்தை தாக்கினோம்.இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்தான். துரத்தி சென்று அடித்து கொலை செய்தோம். இந்த ெகாலையை மறைக்க விபத்தில் அடிபட்டு சிவக்கொழுந்து சாலையில் கிடந்ததாக கூறி அவரது வீட்டில் இறக்கிவிட்டு நாடகம் ஆடினோம்.

    ஆனால் நாங்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். போலீசார் எங்களை தேடுவது தெரிந்து தப்பி ஓட முயன்றோம். ஆனாலும் போலீசார் எங்களை மடக்கி பிடித்துவிட்டனர். மேலும், நாங்கள் சிவக்கொழுந்துவை தாக்கப் பயன்படுத்திய தடியினையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டாம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த 2 பேரையும் 

    • வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
    • சிறுமுகை அருகே வீடு புகுந்து கைவரிசை காட்டினர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55). விவசாயி. தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மணியம்மாள் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், சிறுமுகை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலையை சேர்ந்த வீரமணி (35) மற்றும் அவரது தம்பி ஆகாஷ் (19) ஆகியோர் என்பதும், மூதாட்டி மணியம்மாளின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    ேமலும் விசாரணையில் அவர்கள் தற்போது காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும், ஊரில் உள்ள கடன் பிரச்சினையால் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர்.
    • வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.

    கிணத்துக்கடவு

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரை அவரது அண்ணன் மகாலிங்கம் (47) என்பவர் குத்தி கொலை செய்தார்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகாலிங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி மற்றும் எனது தம்பியின் மனைவி ஆகியோர் பிரிந்து சென்றனர்.

    இதனால் கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தனியாக வசித்து வந்தோம். அப்போது நானும் எனது தம்பி ஆறுச்சாமியும் தேங்காய் வியாபாரம் செய்ய திட்டமிட்டோம். அதன் படி என்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து தேங்காய் வியாபாரத்தை தொடங்கினோம். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் நாங்கள் தற்போது எங்கள் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.

    வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நாங்கள் தினசரி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது எங்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

    சம்வத்தன்று நாங்கள் வழக்கம் போல ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது நான் எனது தம்பியிடம் தேங்காய் வியாபாரம் செய்ய அடகு வைத்து நகைகளை மீட்க வேண்டும் என்பதற்காக பணம் கேட்டேன். அப்போது எனது தம்பி லாபத்தில் மட்டும் தான் பங்கு கேட்பேன். நஷ்டம் வந்தால் அவருக்கு தெரியாது என கூறினார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எனது தம்பி அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து எனது தம்பியை குத்த முயன்றேன்.பயந்த அவன் என்னை தள்ளி விட்டு ஓடினான்.

    நான் அவரை விரட்டி சென்றேன். வடபுதூர் பஸ் நிலையம் அருகே சென்ற போது எனது தம்பி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது நான் கத்தியால் ஆறுச்சாமியின் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தினேன். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றேன்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே எனது தம்பி ஆறுச்சாமி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் தம்பியை குத்தி கொலை செய்த தொழிலாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    ×