search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youngman arrest"

    • தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் ரவிசேகர்(வயது58). இவர் வ.உ.சி மார்க்கெட் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதர் நகரை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) என்பவர் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் ரவிசேகர்(வயது58). இவர் வ.உ.சி மார்க்கெட் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.2,500-ஐ திருடி சென்றனர்.

    அதே நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன்ரோடு எஸ்.எஸ். மூர்த்தி தெருவில் உள்ள ஒரு மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த ரூ. 16,000-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து 2 கடைகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமாரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மேல சண்முகபுரம் தாமோதர் நகரை சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) என்பவர் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டனர். கைதான சரவணன் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 12 திருட்டு வழக்குகள் உள்ளது.

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
    • தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்கள் கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஜூலை 27-ந்தேதி அன்று நள்ளிரவு காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் கோர்கள் காணாமல் போனது.

    இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் எட்வர்ட் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதன் அடிப்படையில் காப்பர் வயர்களை திருடிய புதியம்புத்தூர் நீராவி பகுதியை சேர்ந்த முருகன் மகன் பரமசிவன் (வயது 30) என்பவர் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து லோடு வாகனத்தில் காப்பர் வயர்களை திருடியது தெரியவந்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் பரமசிவனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3.58 லட்சம் மதிப்பிலான 126 கிலோ காப்பர் வயர் மற்றும் காப்பர் கோர்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாளை பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னீர்பள்ளம் செங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது28) என்பதும், அவரிடம் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்துங்கநல்லூர் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில் பத்து பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற சுந்தரம் (வயது 19). இவர் வாட்ஸ்-அப்பில் சாதியை திட்டி அவதூறான தகவல் பரப்பியுள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து செய்துங்கநல்லூர் கிராம அதிகாரி பாண்டிபெருமாள் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் வழக்கு பதிவு செய்து கோட்டை என்ற சுந்தரத்தினை கைது செய்தனர். கைதான சுந்தரம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். #tamilnews
    ×