search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm narayanasamy"

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் பெற்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதற்காக முதல்- அமைச்சர் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக உருவாக்கி ரூ.85 லட்சம் வரை வசூல் செய்து இருக்கிறார்.

    இது, விதிமுறைகள்படி தவறானது. இதில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை.

    புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை கால்வாய்களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை.

    இந்த நிலையில் “நீர்வளமிக்க புதுச்சேரி” என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாய சிந்தனை மிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    யாரையும் கட்டாயப்படுத்தி இப்பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை வலியுறுத்தவில்லை. இந்த பணி நடைபெறும்போது அரசு அல்லது அரசு முகமைகள் மூலமாக எந்வித பணபரிமாற்றமும் நடப்பதில்லை. கொடையாளர்கள், பணியை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் இடையே மட்டுமே பணபரிமாற்றம் நடக்கிறது.

    எவ்வித நிதி பரிமாற்றமும் இல்லாமல் பொதுப்பணித்துறை நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமுதாய பங்களிப்புடன் இதுவரை 25 பாசன கால்வாய்கள் சுமார் 84 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளன.

    இந்த பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணம் எதையும் கவர்னர் மாளிகை நேரடியாக பெறவில்லை.

    பணபரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும் போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்.

    கவர்னரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவநீதிதாஸ், கவர்னர் மாளிகையில் பணியை தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் மத்திய உள்துறை, மாநில நிதித்துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் கவர்னரின் ஆலோசகராக அதாவது கவர்னரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி தான் கவர்னரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார்.

    யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர் வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடும் நடக்கவில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.  #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    கவர்னர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார். #cmnarayanasamy #puducherrygovernor

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட கலெக்டரும் உள்ளனர்.

    புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழியாக பெறப் படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும்.

    இந்த நிதியின் மூலம் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு பரிசோதனை கருவி வாங்குவதற்காக ரூ.13½ லட்சம் நிதியை இந்தியன் வங்கி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.

    கவர்னர் மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் போன் மூலம் சமூக பங்களிப்பு நிதி தரும்படி கட்டாயப்படுத்துவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. பல தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.85 லட்சம் நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த பங்களிப்பு நிதியை பெற்றதற்காக எந்த அத்தாட்சி ரசீதும் தரப்படவில்லை. இந்த நிதியை எதற்காக செலவு செய்யப்போகிறார்கள்? என்ற கணக்கு விபரமும் தெரியவில்லை. இந்த நிதியை வசூலிக்க கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் அதிகாரம் கிடையாது.

    அப்படியிருக்க எந்த அடிப்படையில் எந்த விதியின் கீழ் இந்த நிதியை வசூலித்தனர்? இதற்கு கவர்னர் மாளிகையில் விளக்கம் தருவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யவுள்ளேன்.

    புதுவை கவர்னரின் செயலாளராக தேவநீதிதாஸ் பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரை கவர்னர் சிறப்பு அதிகாரியாக நியமித்தார். இதற்காக உள்துறைக்கு கோப்பு அனுப்பினார்.

    இந்த கோப்பிற்கு உள்துறை அனுமதி தரவில்லை. அனுமதி பெறாமலேயே தேவநீதி தாசை தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக நியமித்து கொண்டார்.

    இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் கவர்னர் அளிக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக நியமக்கப்பட்டுள்ள தேவநீதிதாஸ் செயலாளர் அறையையே பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.

    சிறப்பு அதிகாரிக்கு கவர்னருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மட்டும் தான் உள்ளது. கவர்னர், அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவோ, அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசவோ எந்த அதிகாரமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். #cmnarayanasamy #puducherrygovernor

    புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கி 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    பகல், இரவு என மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. லேசான மழையை தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் 1,500 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி உள்ளது.

    மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் வரப்புகளை வெட்டி திறந்து விட்டுள்ளனர். இருப்பினும் தொடரும் மழையால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மழை நின்றால் மட்டுமே பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுவதை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அதோடு இன்றைய தினம் (சனிக்கிழமை) புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி மொகரம் பண்டிகைக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இதனால் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது கனமழையும் மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வானிலை மையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்திருப்பதால் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் நாளை பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மோசமான வானிலை காரணமாக புதுவையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    தமிழகம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுவையில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RedAlertWarning #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அன்றைய தினம் 20 முதல் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கூடுதலாக மழைபெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியான புதுவையிலும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை 4 மணிக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் மாவட்ட கலெக்டர், அரசு துறையின் செயலர்கள், இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. #RedAlertWarning #Narayanasamy

    தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் களத்தில் இறங்கி செயல்பட்ட புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    புதுடெல்லி:

    புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் முதல் மந்திரி நாராயணசாமி அக்டோபர் ஒன்றாம் தேதி 'தூய்மையே சேவை' திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    அப்போது, திடீரென வேட்டியை மடித்துக் கட்டிய அவர், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்தார்.



    இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    புதுவையில் கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவையில் போலீஸ் துறை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உதய தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 55-வது உதயதினம் இன்று கோரிமேடு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்தால் அவற்றை கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள், பல மாதங்கள் ஆகிறது. புதுவையை பொறுத்தவரை குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் சக்தி இங்குள்ள போலீசுக்கு உள்ளது.

    கடந்த காலங்களில் நகை பறிப்பு, நிலம் அபகரிப்பு, தொழில் உரிமையாளர்களை மிரட்டுதல், பட்டபகலில் கொலை என்ற நிலை இருந்தது. இன்று காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை காப்பதில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளோம்.

    போலீஸ் துறையை முடுக்கி விட்டதன் மூலம் கொலை குற்றம், நில அபகரிப்புகள் போன்றவற்றை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பாக செயல்பட்ட போலீஸ் தலைமை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடகு கடை உரிமையாளர் கொலை வழக்கு, ஏ.டி.எம். கும்பல் கைது போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் மாநிலம் என்ற விருதை நாம் பெற்றுள்ளோம். இப்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் அவர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டம் நடத்தினார்கள். அவர்கள் புதுவையில் ஒட்டுமொத்தமாக மாமுல் தொல்லை ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்கள். இதற்கு போலீஸ் நடவடிக்கை தான் காரணம்.

    கஞ்சா, லாட்டரி, போதை பொருள் விற்பது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஸ்பெ‌ஷல் பிராஞ் போலீசார் தங்கள் திறமையை காட்ட வேண்டும். போலீசாரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஜி.பி. சுந்தரி நந்தா பேசியதாவது:-

    புதுவையில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக காத்து வருவதால் தான் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. ஆனால் காவல் துறையினரின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான எண்ணங்களை உருவாக்கி வருகிறார்கள்.

    புதுவை வளர்ச்சிகாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் போலீசாருக்கு எப்போதும் துணை நிற்போம்.

    இவ்வாறு கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த பினாபரமேல், வரதராஜ பெருமாள், ஜெனிபர், ஷீஜேஷ், சுஜித், ஜித்தேஷ், சங்கர், நரேந்திரன், நாகராணி, ஏழுமலை, சுந்தரலிங்கம், ரிஜேஷ்குனில், குக்கலதுர்காபிரசாத் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    ரபேல் விமானங்களை மாநில மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இளம் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டார். அதனை ஏற்று பிரமாண்டமான ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டி உள்ளீர்கள்.

    இதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ராகுல் அழைப்பு விடுத்தார். அதனையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிளீர்கள். அதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரபேல் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்

    ரபேல் விமானத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டுள்ளது. போர்பர்சில் ரூ. 68 கோடி ஊழல் என குற்றம் சாட்டி மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது.

    ஆனால் இன்று ரபேல் விமான வாங்கியதில் ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.

    பெட்ரோல்- டீசல் விலை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் இருந்தது. தற்போது 80 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் விலை ரூ. 72 ஆக சரிந்துள்ளது.

    பண மதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதால் தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    பாராளுமன்றம் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும். புதுவை வேட்பாளரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
    புதுவையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2½ லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #Narayanasamy #InterCasteMarriage
    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

    அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஒப்புதலோடு கவர்னர் கிரண்பேடி 14.9.2017 முதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2½ லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.



    அதன்படி அரசாணை எண். 02/2018-19 Wel(SCW), 07.09.2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Narayanasamy #InterCasteMarriage
    காவிரி கால்வாய்களை தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் திருமலைராஜன் ஆறு, நூலாறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரவிடையான் ஆறு, வாஞ்சி ஆறு ஆகிய காவிரி கிளை ஆறுகள் பாய்கின்றன.

    இவற்றில் திருமாலை ராஜன், அரசலாறு ஆகியவற்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற ஆறுகளில் தண்ணீர் வரவில்லை.

    தமிழக எல்லைப் பகுதியான காவிரி கடைமடைப் பகுதியில் அந்த மாநில அரசால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.


    எனவே காவிரி கடைமடைப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி ஆறுகளை தூர்வார வலியுறுத்தி தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.

    காரைக்கால் பகுதி ஆறுகளில் ரூ.60 லட்சத்தில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியில் சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    புதுவை அரசு வசம் 100 டன் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதுபோல 150 டன் உரங்களும், பாட்கோ, பஜன்கோ நிறுவனங்களில் தயார் நிலையில் உள்ளன.

    எனவே, புதுவை விவசாயிகள் விதைகள், உரங்களுக்காக தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஆண்டு இருக்காது. உரத்தை மானிய விலையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அது போல வேளாண் சாகுபடிக்குத் தேவையான பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    புதுவையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சதுக்கத்தில் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

    தொடர்ந்து, மும்மத பிரார்த்தனை நடந்தது. பாரதிதாசன் பல்கலைக்கூட மாணவிகள் தேசபக்தி பாடல்கள் பாடினர். முதல்- அமைச்சர் நாராயணசாமி உறுதிமொழி வாசிக்க அதனை பின்தொடர்ந்து மற்றவர்கள் எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான் கமலக்கண்ணன், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக் கொழுந்து எம்எல்ஏக்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி.

    முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், துணை தலைவர்கள் விநாயக மூர்த்தி, தேவதாஸ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், தனுசு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #narayanasamy #rajivgandhibirthday

    வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாராயணசாமி, ரங்கசாமி பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். 

    முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, என்.எஸ்.ஜே. ஜெபால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ராஜாங்கம், பா.ம.க. செயலாளர் தன்ராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர்கழக தலைவர் வீரமணி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, புதியநீதிகட்சி தலைவர் பொன்னுரங்கம், முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
    விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அரசு அதிகாரிகள் கவர்னரின் டுவிட்டர் உத்தரவுகளுக்கு பணிந்து செயல்பட வேண்டும் என அவசியமில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதற்கு கவர்னர் எனக்கு டுவிட்டரிலேயே பதில் அளித்திருந்தார்.

    மறுநாள் கவர்னக்கு நான் கடிதம் அனுப்பினேன். இந்தக் கடிதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன். டெல்லி அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    புதுவை மாநிலத்துக்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளிக்கும் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும்.


    கடந்த 2 ஆண்டுகளில் புதுவை மக்களுக்கு கவர்னர் என்ன செய்துள்ளார்? இலவச அரிசி போடுவதை தடுத்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

    மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. இதனை தடுக்கும் வகையிலேயே கடந்த 2 ஆண்டுகளாக கவர்னர் செயல்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளேன்.

    புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கூடுதலாக 240 இடங்கள பெற்றுள்ளோம். சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகே‌ஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது.

    இந்த இடங்களுக்கு மாணவர்களை சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் சேர்க்க இருக்கிறோம். இதனால் கல்லூரிக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும்.

    மேலும் பொறியியல் பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 20 இடங்களை பெற்றுள்ளோம்.

    இந்த இடங்களையும் சுயநிதி அடிப்படையிலேயே சேர்க்க உள்ளோம். கால்நடை மருத்துவ கல்லூரியையும் விவசாய கல்லூரியையும் இணைந்து விவசாய பல்கலைக்கழக அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryGovernor #Kiranbedi #PuducherryCM #Narayanasamy
    ×