search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clean india campaign"

    தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமங்களில் நோய்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #MahatmaGandhi #CleanIndia #Modi
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகையில், ‘மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை பிரசார மாநாடு’ கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. நேற்று அதன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    உலகத்தை தூய்மைப்படுத்த 4 ‘பி’ (ஆங்கில எழுத்து) எழுத்து மந்திரங்கள் தேவைப்படுகிறது. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாக செயல்படுதல், மக்கள் பங்கேற்பு ஆகியவையே அந்த மந்திரங்கள்.

    இன்று ஏராளமான நாடுகள், தூய்மை பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இது, முன்பு எப்போதும் கேள்விப்படாதது. ஒரு இந்திய பிரசாரம், உலகின் மாபெரும் மக்கள் இயக்கமாகி இருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு, உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்துள்ளது. 4 ஆண்டுகளில், 90 சதவீதம் பேர் கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர்.



    5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவை ஆகியுள்ளன. 25 மாநிலங்கள் தங்கள் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லை என்று அறிவித்துள்ளன. இவையெல்லாம் ‘தூய்மை இந்தியா’ இயக்கம், மக்களின் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள். கிராமப்புறங்களில் நோய்களின் எண்ணிக்கை குறைந்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு செலவிடும் பணத்தின் அளவும் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட மகாத்மா காந்தி, தூய்மை பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். 1945-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘ஆக்கப்பூர்வ திட்டங்கள்’ பட்டியலில், கிராமப்புற தூய்மை முக்கிய இடம் பிடித்திருந்தது. காந்தியின் கொள்கைகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்காவிட்டால் தூய்மை பிரசாரம், எனது அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பிடித்து இருக்காது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் காந்தியும், அவரது போதனைகளும்தான் என்னை வழிநடத்தின என அவர் பேசினார்.

    இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பங்கேற்றார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக பிரதமரை அவர் பாராட்டினார்.

    அதன்பின்னர், மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான ‘வைஷ்ணவ் ஜன தோ தேன் ககியே?’-ன் சர்வதேச வடிவத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இது, 5.34 நிமிடம் ஓடும் வீடியோவாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலை 124 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பாடியுள்ளனர்.

    மேலும், மகாத்மா காந்தி உருவம் பொறித்த 7 அஞ்சல் தலைகளையும் மோடி வெளியிட்டார். இவை, வட்ட வடிவ அஞ்சல் தலைகள் ஆகும். சுதந்திர இந்தியாவில் இத்தகைய அஞ்சல் தலைகளை வெளியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MahatmaGandhi #CleanIndia #Modi
    தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் களத்தில் இறங்கி செயல்பட்ட புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    புதுடெல்லி:

    புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் முதல் மந்திரி நாராயணசாமி அக்டோபர் ஒன்றாம் தேதி 'தூய்மையே சேவை' திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    அப்போது, திடீரென வேட்டியை மடித்துக் கட்டிய அவர், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்தார்.



    இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    ×