என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Holiday"

    • சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-


    எண் விடுமுறை நாட்கள் தேதி கிழமை
    1 ஆங்கில புத்தாண்டு 1.1.2026 வியாழன்
    2 பொங்கல் 15.1.2026 வியாழன்
    3 திருவள்ளுவர் தினம் 16.1.2026 வெள்ளி
    4 உழவர் திருநாள் 17.1.2026 சனி
    5 குடியரசு தினம் 26.1.2026 திங்கள்
    6 தைப்பூசம் 1.2.2026 ஞாயிறு
    7 தெலுங்கு வருட பிறப்பு 19.3.2026 வியாழன்
    8 ரம்ஜான் 21.3.2026 சனி
    9 மகாவீர் ஜெயந்தி 31.3.2026 செவ்வாய்
    10 ஆண்டு வருட கணக்கு 1.4.2026 புதன்
    11 புனித வெள்ளி 3.4.2026 வெள்ளி
    12 தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் 14.4.2026 செவ்வாய்
    13 மே தினம் 1.5.2026 வெள்ளி
    14 பக்ரீத் 28.5.2026 வியாழன்
    15 முகரம் பண்டிகை 26.6.2026 வெள்ளி
    16 சுதந்திர தினம் 15.8.2026 சனி
    17 மிலாது நபி 26.8.2026 புதன்
    18 கிருஷ்ண ஜெயந்தி 4.9.2026 வெள்ளி
    19 விநாயகர் சதுர்த்தி 14.9.2026 திங்கள்
    20 காந்தி ஜெயந்தி 2.10.2026 வெள்ளி
    21 ஆயுத பூஜை 19.10.2026 திங்கள்
    22 விஜய தசமி 20.10.2026 செவ்வாய்
    23 தீபாவளி 8.11.2026 ஞாயிறு
    24 கிறிஸ்துமஸ் 25.12.2026 வெள்ளி


    • வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
    • தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
    • பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

    அத்தகைய மக்களுக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் அதிக இந்திய மக்கள் தொகை இருப்பதால், கலிபோர்னியா தங்களுக்குப் பிடித்த தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரித்து, ஆளுநர் கவின் நியூசம் நேற்று முன்தினம் ஒரு புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய-அமெரிக்க சமூகங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி, பொதுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். மேலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    • வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதளாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    மேலும், நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால், நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் 31-ந்தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.1-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 9-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மொகரம் பண்டிகையையொட்டி நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் நாளை (9-ந்தேதி) மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக ஈடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கி 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    பகல், இரவு என மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. லேசான மழையை தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் 1,500 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி உள்ளது.

    மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் வரப்புகளை வெட்டி திறந்து விட்டுள்ளனர். இருப்பினும் தொடரும் மழையால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மழை நின்றால் மட்டுமே பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுவதை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அதோடு இன்றைய தினம் (சனிக்கிழமை) புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி மொகரம் பண்டிகைக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இதனால் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது கனமழையும் மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வானிலை மையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்திருப்பதால் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் நாளை பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மோசமான வானிலை காரணமாக புதுவையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    ×