என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தீபாவளி விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட முதல்-மந்திரி ரங்கசாமி
    X

    தீபாவளி விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட முதல்-மந்திரி ரங்கசாமி

    • வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
    • தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×