என் மலர்
நீங்கள் தேடியது "Diwali holiday"
- தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கு தயாராகி விட்டனர். சில பனியன் நிறுவனங்களில் கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பூர் மாநகர கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் நேற்று (புதன்கிழமை) முதல் போனஸ் பட்டுவாடா செய்யும் பணியை தொடங்கி விட்டனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) போனஸ் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். திருப்பூரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் கடந்த 2 நாட்களாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.
இந்நிலையில் நாளை (10-ந்தேதி) முதல் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து ெசாந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் 20-ந் தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே பனியன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். மேலும் திருப்பூர் மாநகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் பஸ், ரெயில் நிலையம், கடைவீதிகளில் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர டிராபிக் வார்டன்கள், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல மாநகராட்சி சந்திப்பு, புதுமார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
- தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக, 10 நாட்கள் வரை விடுமுறை அளித்துள்ளன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றுள்ளனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன. குறிப்பாக நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வரத்தொடங்கி உள்ளனர். கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு சில நாட்களுக்கு, வழக்கமான பணிகளை செய்ய நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் 18, 19 ஆகிய தேதிகளில் திருப்பூர் திரும்ப உள்ளனர். அதன்படி, வருகிற 20-ந்தேதி முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை துவக்கும். ஜாப் ஒர்க் நிறுவனங்கள், அதற்கு பிறகே தங்கள் இயக்கத்தை தொடங்க முடிவு செய்து உள்ளனர்.
- வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதளாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும், நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர்.
- செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதே போல ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் வருகை தந்துள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சமாகும். சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
- தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாள்.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்தது.
இதைதொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் எனவும், இதனால் வெளி ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும் எனவும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.
இதைஅடுத்து தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (9-11-24) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.