தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாள்.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்தது.

இதைதொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் எனவும், இதனால் வெளி ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும் எனவும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

இதைஅடுத்து தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (9-11-24) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com