search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooperation"

    • கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இக்கிராமத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் 1958 வீடுகளில் 1946 வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். மேலும் பொது வெளியில் கழிப்பறைக்கு செல்லாமல் பாதுகாப்பான முறையில் வீடுகளில் உள்ள கழிப்பறையில் செல்லும் போது சுகாதாரம் பேணிக் காக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் நகரப் பகுதி விரிவாக்கம் அடைவதோடு இந்த பகுதி பொருளாதார அடிப்ப டையில் முன்னேறக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி பஸ்நிலையம் அமைப்பதால் இந்த பகுதி வளரக்கூடிய மையமாக மாறக்கூடும். வருங்காலங்களில் லால்பு ரம் பெரிய நகரமாக மாறுவ தற்கு ஏதுவாக அமையும் . இது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி முழுவதும் சுகாதா ரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சி துணை இயக்குனர் சபனா அஞ்சும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்
    • அலங்கார ஆடைகள் மட்டுமே பய ன்படுத்த ப்படவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா வினை கொண்டாடு ம்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இதில் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்ப ட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்த ப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்க ப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ண ப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ண ப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பய ன்படுத்த ப்படவேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.உப்பனாறு ,தேவனா ம்பட்டினம் கடற்கரை,கொள்ளிடம் ஆறு மற்றும்வெள்ளாறு விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுரங்கம்-2ன் வெட்டு முகத்திலிருந்து வெகு அருகில், அதாவது, 60 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
    • அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவும் இது உதவும்.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், சுரங்கம்-2 பகுதியில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் மிக முக்கியமான பணி நிறைவடைந்தது. பரவனாற்றுப் பாதையின், மொத்தமுள்ள 12 கி.மீ. நீளத்தில், 10.5 கி.மீ. நீளத்திற்கான ஆற்றுப் பாதை அமைக்கும் பணி, ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நிலையில் மீதி இருந்த 1.5 கி.மீ. பகுதியில் பாதை அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம், கடந்த 26-ந் தேதி தொடங்கியது. பரவனாற்றுப் பாதையின் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெறும் இடமானது சுரங்கம்-2ன் வெட்டு முகத்திலிருந்து வெகு அருகில், அதாவது, 60 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இந்த பரவனாறு, சுரங்கம்2-ன், வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து 100 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நீர் பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கப்பெறும் மழை நீரை கையாள வேண்டும். இந்த பகுதியில் பல கிராமங்களும், அந்த கிராமங்களைச் சுற்றி வயல்வெளிகளும் உள்ளன.இடைவிடாத மற்றும் கனமழையின் போது ஏற்பட க்கூடிய வெள்ளப் பெருக்கில் இருந்து, கிராம மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்திட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான அவசியத்தையும், தேவை யையும் கருத்தில்கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம்அ தற்கான ஒரு நிரந்தரத் தீர்வாக, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மேற்கொண்டது.

    மொ த்தம் 12 கி.மீ நீளமுள்ள பரவனாற்றின் பாதையை நிரந்தரமாக மாற்றியமை ப்பதற்கான, தோராயமான பரப்பளவு 18ஹெக்டேர் ஆகும். ஏற்கனவே என்.எல்.சி. ஐ. எல்.சுரங்கங்கள் மூலம் பரவனாறு நீரால், ஆண்டு முழுவதும் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால், பல ஏக்கர், கூடுதல் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், பரவனாறு ஆற்றில் தொடர்ந்து இருந்து வரும் நீர் இருப்பின் காரணத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவும் இது உதவும். என்.எல்.சி.இந்தியா நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதைக்கான கால்வாய் அமைக்கும் பணியானது அனைத்து கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுக்கள், கடலூர் மாவட்ட கலெக்டர், தமிழக அரசு, நிலக்கரி அமைச்சகம், இந்திய அரசு மற்றும் அனைத்து பங்குதாரர்கள் ஆகியோர் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினால் வெற்றிகரமாக செயல்படுத்த ப்பட்டதுஎன என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 ஜனவரி 1-ந்தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரி பார்க்க உள்ளனர். இப்பணி வருகிற ஆகஸ்ட் மாதம் 21- ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மற்றும் 100 சதவீத தூய்மையாகவும் முடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியுள்ளார்.

    • சமூக நல்லிணக்க திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
    • இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முகம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்ல வாப்பா ஆகியோர் கூறியதாவது:-

    கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க ஒன்று கூடும் திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய பெண்கள் சமூக நல்லி ணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை நடத்த வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை(22-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10.30 வரை ரம்ஜான் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள்பை எடுத்துச் செல்வோம்.
    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சயின் சார்பில்ராஜாஜி பூங்காவில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார் நகராட்சி ஓவர்சியர் குமரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில்நகராட்சி துணைத் தலைவர் மங்களநாயகி, நகர மன்ற உறுப்பினர்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளர் முகமது இப்ராஹிம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்கலந்து கொண்டனர்

    பின்பு என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது. பேரணியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள் பை எடுத்து செல்லவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி கடைகள், வீடுகளுக்கும் பாதசாரிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பச்சை நிற கூடைகளில் மக்கும் குப்பை களையும் நீல நிறக் கூடைகளில் உலர் கழிவுகளையும் மக்காத குப்பைகளை சிவப்பு நிற கூடைகளிலும் கொட்ட வேண்டும்.

    மேலும் வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து தினசரி குப்பை எடுக்க வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் குப்பைகளை ரோட்டில் கொட்டி வைக்க கூடாது தூய்மையான நகரமாக திகழ பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டு கொண்டார்.

    • போதைப்பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:

    மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என பிரித்து, கண்காணித்து ஒவ்வொருவருக்கும் அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலம்பாடி ஊராட்சியில் 12 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். சத்துக் குறைபாடு கண்டறியப்பட்ட 12 தாய்மாா்களும், ஊட்டச்சத்து அலுவலா்களின் வழிமுறைகளை கையாள வேண்டும். மிதமான ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், அதை கவனத்தில்கொண்டு மருத்துவரை அணுகி தேவையான உணவு உட்கொள்ள வேண்டும்.

    போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவது குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் சிறப்புக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் காவல்துறை அல்லது அரசு அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் போருள்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றாா் அவா்.

    • கரூரை தொழில் மாவட்டமாக உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து தொழில் நிறுவன மனித வள மேலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாரத்தில் 13, கரூர் வட்டாரத்தில் 14 என 27 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதிசேவைகளுக்கு வழிவகை செய்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி, வளத்தினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தினால் கிராமப்புற பெண்கள் அவர்களின் வசிப்பிடங்கள் அருகிலேயே சிறு தொழில் கூடங்கள் அமைத்து செயல்படுத்தினால் அவர்களது குடும்ப வளர்ச்சி, பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு உறுதுனையாக இருக்கும். ஆகையால், தொழில் நிறுவனங்கள் சிறு தொழில் கூடங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். ஆகவே, கரூர் மாவட்டத்தை தொழில் மாவட்டமாக உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு வாழ்வாதார திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிகண்டன், வாழ்ந்துகாட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் ஆருண், இந்திய தொழில் கூட் டமைப்பு தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 2-வது கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வைத்து எண்ணப்பட இருக்கிறது. தற்போது அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாக்கு எண்ணிக்கை குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டு, தபால் ஓட்டுகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்படும். வேட்பாளர்கள் விரும்பினால் தபால் ஓட்டு எடுத்து செல்லுவதை கண்காணித்துக்கொள்ளலாம்.

    தொடர்ந்து அரசு கலைக்கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து 30 நிமிடத்திற்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

    விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அவர்களின் சார்பாக ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் 14 முகவர்களையும், தபால் ஓட்டு எண்ணும் இடத்தில் ஒரு முகவரையும் நியமனம் செய்து கொள்ளலாம்.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்கள், முகவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் அதற்குரிய சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிட மிருந்து பெறும்பொழுது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், சப்- கலெக்டர்கள் திருக்கோவிலூர் சாருஸ்ரீ, திண்டிவனம் மெர்சிரம்யா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் விழுப்புரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.
    விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அரசு அதிகாரிகள் கவர்னரின் டுவிட்டர் உத்தரவுகளுக்கு பணிந்து செயல்பட வேண்டும் என அவசியமில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதற்கு கவர்னர் எனக்கு டுவிட்டரிலேயே பதில் அளித்திருந்தார்.

    மறுநாள் கவர்னக்கு நான் கடிதம் அனுப்பினேன். இந்தக் கடிதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன். டெல்லி அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    புதுவை மாநிலத்துக்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளிக்கும் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும்.


    கடந்த 2 ஆண்டுகளில் புதுவை மக்களுக்கு கவர்னர் என்ன செய்துள்ளார்? இலவச அரிசி போடுவதை தடுத்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

    மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. இதனை தடுக்கும் வகையிலேயே கடந்த 2 ஆண்டுகளாக கவர்னர் செயல்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளேன்.

    புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கூடுதலாக 240 இடங்கள பெற்றுள்ளோம். சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகே‌ஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது.

    இந்த இடங்களுக்கு மாணவர்களை சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் சேர்க்க இருக்கிறோம். இதனால் கல்லூரிக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும்.

    மேலும் பொறியியல் பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 20 இடங்களை பெற்றுள்ளோம்.

    இந்த இடங்களையும் சுயநிதி அடிப்படையிலேயே சேர்க்க உள்ளோம். கால்நடை மருத்துவ கல்லூரியையும் விவசாய கல்லூரியையும் இணைந்து விவசாய பல்கலைக்கழக அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryGovernor #Kiranbedi #PuducherryCM #Narayanasamy
    ×