search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்
    X

    கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார் அருகில் கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளார்.

    லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்

    • கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் லால்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராமப்புறம் மூலமாக தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இக்கிராமத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. இதில் 1958 வீடுகளில் 1946 வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பாராட்டுக்குரிய செயலாகும். மேலும் பொது வெளியில் கழிப்பறைக்கு செல்லாமல் பாதுகாப்பான முறையில் வீடுகளில் உள்ள கழிப்பறையில் செல்லும் போது சுகாதாரம் பேணிக் காக்கப்படும். மேலும் இந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் நகரப் பகுதி விரிவாக்கம் அடைவதோடு இந்த பகுதி பொருளாதார அடிப்ப டையில் முன்னேறக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி பஸ்நிலையம் அமைப்பதால் இந்த பகுதி வளரக்கூடிய மையமாக மாறக்கூடும். வருங்காலங்களில் லால்பு ரம் பெரிய நகரமாக மாறுவ தற்கு ஏதுவாக அமையும் . இது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி முழுவதும் சுகாதா ரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சி துணை இயக்குனர் சபனா அஞ்சும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×