search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நல்லிணக்க திருவிழா
    X

    சமூக நல்லிணக்க திருவிழா

    • சமூக நல்லிணக்க திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
    • இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முகம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்ல வாப்பா ஆகியோர் கூறியதாவது:-

    கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க ஒன்று கூடும் திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய பெண்கள் சமூக நல்லி ணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை நடத்த வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை(22-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10.30 வரை ரம்ஜான் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×