search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood donation"

    • காரைக்காலில் சிறப்பு ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
    • 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெருந்தலை வர் காமராஜர் அரசு பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரியின் பேராசிரியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரி யர்கள் பிரவின்குமார், ஞான முருகன். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவன்பஷீர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் மற்றும் மன்சூர் வின்சென்ட், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
    • சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாவட்டத்தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் பாரூக் வரவேற்றார்.

    ரத்ததான முகாமை பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் எஸ்.குமார், தி.மு.க. பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கணபதிபாளையம் சிவசுப்பிரமணியம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். 

    • தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
    • விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

    சுவாமிமலை:

    இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் விவேகானந்தா கலாம் பவுண்டேசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் வழிகாட்டுதல் படி ரத்த தான முகாம் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் வரவேற்றார்.

    நேருயுவகேந்தி ராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தலைவர் ஸ்ரீவிமூர்தானந்தா மஹரிஷி முன்னிலை வகித்தார்.

    கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.

    கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ வாழ்த்துரை வழங்கினார்.

    கும்பகோணம் போர்டர் ஹால் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜயகுமார், ரவிராமன் கும்பகோணம் ரெட்கிராஸ் தொண்டர்கள் சிவக்குமார், சபாபதி கலந்து கொண்டனர்.

    கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர்சிவந்தி, சலீம் ஆகியோர் முகாமில் ரத்த தான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இறுதியாக டாக்டர் சலீம் நன்றி கூறினார்.

    • முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் அரசு மருத்துவமனை, கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நிலவழகி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பிரபாகரன், பேராசிரியர் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரிமுத்து, மாணவ- மாணவிகள் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
    • 70 பேர் ரத்ததானம் செய்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் இன்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .

    தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,கவுன்சிலர்கள் ,கிளைக் கழக செயலாளர் உட்பட 70 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ,நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் ,வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் ,யூசுப் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • நல்ல மருது நினைவு நாளை முன்னிட்டு 200 பேர் ரத்ததானமும், 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    • இதனை முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியில் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி ரத்தம் கொடுத்து ரத்த தானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக நல்ல மருதுவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் போஸ் முத்தையா, பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர் வாசு, சோலையழகுபுரம் கண்ணன், வக்கீல் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கவுதம் போஸ், விஷ்ணுவரதன், ஆதித்யா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.

    • 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.
    • கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி சார்பில் காரமடையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி காரமடை தலைவர் மகேஷ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார், செயலாளர் சௌமியாசதீஷ் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தளவாய்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிசத் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இதை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்த நிகழ்வில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ- மாணவிகள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றார்.

    இதில் ஊர்த்தலைவர் உதயசூரியன், பள்ளி தாளாளர்கள் ரவிசந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமை ஆசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தி.மு.க. கிளை செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.
    • அப்போது பேசிய அவர் ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், இந்த ரத்த தான முகாம், தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் 1 வரை நாடு முழுதும் நடக்கும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். ரத்த தானம் செய்ய விரும்புவோர் ஆரோக்ய சேது செயலி அல்லது இ ரக்த்கோஷ் இணைய தளத்தில் பதிவு செய்யலாம். ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.

    இந்நிலையில், விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்துள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.

    திருப்பூர் :

    ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அகில பாரதிய தெராபந்த் யுவக் பரிஷத் சார்பில் ரத்ததான முகாம் திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆதார் மருத்துவமனை ரத்த வங்கி, ரேவதி மருத்துவமனை ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைவர் சுமித் பண்டாரி, செயலாளர் அங்கித் போத்ரா, கன்வீனர் ஹேமந்த் ஜெயின், துணை கன்வீனர் அமன் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

    • நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி அப்துல் கலாம் மாணவர் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். தேன்மொழி தலைமையில் மருத்துவக்குழுவினர்கள் 55 யூனிட் வரை ரத்தம் சேகரித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் உதயபிரகாஷ் மற்றும் தாரன்யா ஆகியார் செய்திருந்தனர். ரத்ததான முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் அப்துல் கலாம் மாணவர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாணவியர்களின் தலைவர் நித்யா ஆகியோர் நன்றி கூறினர்.

    ×