என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து சாதனை
Byமாலை மலர்17 Sep 2022 10:43 PM GMT
- டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.
- அப்போது பேசிய அவர் ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.
புதுடெல்லி:
விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்த ரத்த தான முகாம், தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் 1 வரை நாடு முழுதும் நடக்கும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். ரத்த தானம் செய்ய விரும்புவோர் ஆரோக்ய சேது செயலி அல்லது இ ரக்த்கோஷ் இணைய தளத்தில் பதிவு செய்யலாம். ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.
இந்நிலையில், விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்துள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
Next Story
×