search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bicycles"

    • பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
    • பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    திருப்பூர் :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லாத இடங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு கல்வி கற்பதற்கான வழி ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பின் இத்திட்டம் மாணவர்களுக்கு பயனில்லாத வகையில் பெயரளவில் மாறியுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிளஸ்- 2 வகுப்புக்கு வந்த பின்தான் சைக்கிள் வினியோகிக்கப்பட்டது.தொடர் கோரிக்கைக்கு பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும்போதே சைக்கிள் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.தற்போது சைக்கிள்கள் வினியோகிக்க தாமதமாவதோடு மேல்நிலை வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைகிறது. இதனால் எந்த பயனும் இல்லை என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :- மேல்நிலை வகுப்புகளுக்கு தடையாக இருப்பதில் முக்கியமானது போக்குவரத்து வசதிதான். அரசின் சார்பில் சைக்கிள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.இதுதவிர அவர்கள் சிறப்பு வகுப்புகள் செல்வதற்கும் தேர்வு நேரம் என பல்வேறு வழிகளில் சைக்கிள் பயணம் உதவுகிறது.ஆனால், அதையும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த பின் வழங்குவதில் எந்த பலனும் இல்லை.மாணவர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வர அறிவுறுத்தும் அரசு அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நெற்குப்பையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் இலவச சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,பேரூராட்சி சேர்மன் அ.புசலான், துணைச் சேர்மன் கே.பி.எஸ். பழனியப்பன், செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • செஸ் போர்டு வாங்க முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவிகளிடம் வழங்கினார்.

    விளாத்திகுளம், செப்.27-

    விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது பாடப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கேட்டு சரியான பதிலை கூறிய மாணவிகளுக்கு ரூ.1000-ம் பரிசளித்தார்.

    அப்போது மாணவிகள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம், நாங்கள் செஸ் ஒலிம்பியட் போட்டியில் பங்கேற்று வந்துள்ளோம். ஆனால் பள்ளியில் செஸ் போர்டு இல்லை என்றனர். அதற்கு நான் உடனடியாக செஸ் போர்டு வாங்கி தருவதாக உறுதி அளித்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை மாணவிகளிடம் வழங்கினார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமை ப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1842 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அதே போல் நீங்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேஷ் பாண்டியன், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
    • 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேத்தூர் சேவுகப்பாண்டி யன் அரசு மேல்நிலை பள்ளியிலும், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    நான் எத்தனையோ பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் நடந்த யோகா, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதற்காக மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். இந்த பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான வகுப்பறைக்கட்டிடத்திற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கி புதிய வகுப்பறைக்கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.

    சேத்தூர் பள்ளியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கமும், மாணவ, மாணவிகள் அமரும் இருக்கைகளும் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கற்பகம்மாள், சுந்தரராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் நகரசபை தலைவர் வழங்கினார்.
    • 286 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 286 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். இதில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகரசபை துணைத் தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். மேலும் விரைவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக ணிணியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    எனவே மாணவ- மாணவிகள் அனை வரும் கல்வியின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆதி நாராயணன், தலைவர் ராமசாமி, பொருளாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, கிளை செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன்,திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை வகித்து 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

    விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 74 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    முன்னதாக பள்ளி தமிழாசிரியர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரேவதி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு.
    • இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

     அண்டனானரிவோ:

    இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டி சென்று இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  


    மேலும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திய தூதர் அபய் குமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
    ராய்ப்பூர்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
    ×