search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவா்கள்"

    • பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது.
    • ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அஷம்ப்ஸ்சன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து வரும் 23 மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நிட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்தப் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியை அனிதா ரேச்சல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-  மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.  

    • ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
    • 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
    • கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

    இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.

    எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    திருப்பூரை அடுத்த குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டம் நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இவா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகளும், 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு திருக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்கு ஆய்வாளா்கணேசனை 99948-92756 என்ற செல்போன் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
    • அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்,

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

    தமிழகம் முழுவதும் 2021-22 ம் ஆண்டுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.இதைத் தொடா்ந்து, 2022- 23 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

    இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்கள் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாா் கல்லூரிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை சான்றிதழ்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இந்தச் சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சேர அனுமதிக்க வேண்டும்.அதேபோல, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×