search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "preference"

    • 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    நன்னிலம்:

    நன்னிலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலைய வளாகத்தில், 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகள் ஏற்கனவே வளாகத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலைய வளாகம் பணிகள் முழுமையாக முடிவடைந்து இன்னும் திறக்கப்படாமல் உள்ளது வியாபாரிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி சிரமப்ப டுவதாக தெரிவித்து வருகி ன்றனர். எனவே உடனடியாக பஸ் நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
    • அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்,

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

    தமிழகம் முழுவதும் 2021-22 ம் ஆண்டுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.இதைத் தொடா்ந்து, 2022- 23 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

    இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்கள் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாா் கல்லூரிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை சான்றிதழ்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இந்தச் சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சேர அனுமதிக்க வேண்டும்.அதேபோல, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×