பல்லடத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார். பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் பலரை படத்தில் காணலாம். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் பலரை படத்தில் காணலாம். 
Published on

பல்லடம் :

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன்,திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை வகித்து 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 74 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com