அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேத்தூர் சேவுகப்பாண்டி யன் அரசு மேல்நிலை பள்ளியிலும், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நான் எத்தனையோ பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் நடந்த யோகா, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதற்காக மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். இந்த பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான வகுப்பறைக்கட்டிடத்திற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கி புதிய வகுப்பறைக்கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.

சேத்தூர் பள்ளியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கமும், மாணவ, மாணவிகள் அமரும் இருக்கைகளும் வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கற்பகம்மாள், சுந்தரராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com