search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • ஆட்டோ ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டுத் தானி வாகனங்களுக்கான பயண கட்டணத்தை 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 10 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், 'தானிகளுக்கான பயண கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினை சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாக தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்

    ஆகவே, தமிழ்நாடு அரசு தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் 'தானி சேவைக்கான முன்பதிவு செயலியை' உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர்.
    • இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன், 4 ரோடு, 5 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, குகை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.

    இந்த நிலையில் சேலம் மாநகரில் வின்சென்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக செல்வதை கண்டு அந்த வழியாக மொபட் ஓட்டிச்சென்ற பெண்கள் கையை நீட்டி சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் திரும்பி வந்த ஆட்டோ டிரைவர் தன்னை சத்தம் போட்ட பெண்கள் சென்ற மொபட்டை வழிமறித்து வம்பு செய்தார். மேலும் அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார். மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு வழிவிட செய்தனர். இதனையடுத்து இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர்.

    ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்களின் மொபட்டை பின் தொடர்ந்து சென்றார். இந்த காட்சிகளை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துச்சென்றனர்.

    ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர். அதற்குள்ளாக அந்த இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.

    கீழே விழுந்ததால் கைகளில் சிராய்ப்பு காயங்களுடன் அவதிப்பட்ட இரு பெண்களையும் அங்கிருந்த பெண்கள் மீட்டு அசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். புத்தி சொன்ன பெண்களை பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் மோதி சாய்த்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்களை இடித்துச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    • 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தல்
    • ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதை தீர்க்க நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி லோயர் பஜார், காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டி.பி.ஓ. வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து.பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் பேரணியை அனுமதிக்காததால் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

    ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர்.
    • நாகர்கோவிலில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 59).ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலையில் நாகராஜன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவர் நாகர்கோவிலில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.ஆனால் நாகராஜன் அங்கு செல்ல வில்லை என்பதை பிறகு அறிந்தனர். இதனால் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

    இந்நிலையில் ஆறுமுக நேரி மெயின் பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடை முன்பு மயங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவர் நாகராஜன் தான் என்பது தெரியவந்தது. உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நாகராஜனின் மகன் சுரேஷ் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அம லோற்பவம் வழக்குப்பதிவு செய்து, நாகராஜன் எப்படி இறந்தார்? விபத்து காரணமா? உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்கிற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆறுமுகநேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
    • ஆறுமுகநேரி மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தில் ஆட்டோ சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிளாட்சன், செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தின் கவுரவ தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். முன்னதாக ஆறுமுகநேரி மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தில் ஆட்டோ சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளில் பா.ஜ.க.வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாவட்ட நிர்வாகி களான தங்கபாண்டியன், முத்துக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் முக்கிய வீதிகளின் வழியாக ஆட்டோ ஊர்வலம் நடைபெற்றது.

    • மலேசியாவிற்கு சென்று சமையல்காரராக பணிபுரிய திட்டமிட்டிருந்தார்.
    • மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் நகரைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். ஒரு லாட்டரி டிக்கெட் விலை 500 ரூபாய். இந்த ஆண்டு 67 லட்சம் ஓணம் பம்பர் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றிருந்த நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் நேற்று அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது.

    இதில் அனுப் வாங்கியிருந்த டி.ஜே. 750605 என்ற சீரியல் எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. முன்னதாக அவர் ஒரு ஓட்டலில் சமையல்காரராக இருந்த நிலையில், மலேசியாவில் சமையல்காரராகப் பணிபுரிய அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.

    தற்போது ரூ.25 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதால் அனூப்பும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் மலேசியாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். வருமான வரிப் பிடித்தம் போக அனூப்பிற்கு 15 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓணம் லாட்டரி டிக்கெட் பரிசு அம்மாநில வரலாற்றில் அதிக விலை மதிப்புள்ளதாக கருதப்படுகிறது. 

    • அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
    • இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகன் அருள்மணி (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவருக்கும் திருமணமாகி நித்ரன் (5), அகிலன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று அருள்மணி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் (23) ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது போதையில் இருந்த அருள்மணியை கற்கள் மற்றும் மதுபாட்டி லால் தலையில் சரமாரியாக தாக்கி அடித்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அருள்மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக வெண்ணந்தூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அருள்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசாரின் விசாரணையில், மணி கண்டன், லோகேஸ்வரன் ஆகியோர் அருள்மணியை அடித்துக்கொலை செய்ததும், அதற்கு உடந்தை யாக அருள்மணியின் மாமியார் ஜானகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், லோகேஸ்வரன் மற்றும் மாமியார் ஜானகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மணி கண்டனுக்கும் ஜானகியின் மகள் ஜோதி லட்சுமிக்கும் இடையே கள்லத்தொடர்பு இருந்ததும அதை கண்டித்து மகளிடம் அடிக்கடி தகராறு செய்ததால் அவர் மூலம் மாமியார் ஜானகி இந்த கொலையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கைதான ஜானகி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    அருள்மணி அடிக்கடி குடித்துவிட்டு எனது மகள் ஜோதிலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் ஜோதிலட்சுமி அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு என் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இதனால் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய நான் மருமகன் அருள்மணியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் மூலம் அருள்மணியை கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மகளின் கள்ளக்கா தலனை ஏவி மருமகனை மாமியார் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர்.

    நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். வெள்ளை மணியுடன் சென்றவர்கள், அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் ஹரிஹரன் (20), அவரது சகோதரர் வினோத்குமார் (21) மற்றும் சரண் என்பது தெரியவந்தது. அருள்தாஸ்புரம், வைகை வடகரை பகுதியில் வெள்ளைமணி உள்பட சிலர் ஒன்றாக மது குடித்தனர். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இதன் காரணமாக அந்த கும்பல் வெள்ளைமணியை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் சண்முகம் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜம்பு என்கிற சண்முகம் (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அதிகாலை சண்முகம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரி யவந்ததும் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×