search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ ஓட்டுநர்"

    • கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • ரூ.10 லட்சம் கேட்டதற்கு அதையும் கொடுக்கவில்லை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜின் குமார் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவருக்கு சந்தியா (34) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சந்தியா, பாகோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனால் இவர்களுக்குள் விவாகரத்து ஆகவில்லை. அவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் விஜின் குமார் தனது மனைவிக்கு தெரியாமல் 18 வயது இளம் பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா, தனது குழந்தைகளை அழைத்து சென்று கணவர் 2-வது திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் கொண்ட விஜின் குமார் ஏற்கனவே உனது பெற்றோரிடம், உனக்குச் சொந்தமான சொத்துக்களை எழுதி கேட்டேன். ஆனால் அவர்கள் தரவில்லை, மேலும் ரூ.10 லட்சம் கேட்டதற்கு அதையும் கொடுக்கவில்லை, எனவே நீ எனக்கு தேவையில்லை என 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெட்டுக்கத்தியால் வெட்டவும் முயன்றுள்ளார்.

    இதனால் பயந்து போன சந்தியா அங்கிருந்து தப்பிச் சென்று மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் விஜின்குமார், 2-வது திருமணத்தை நடத்தி வைத்த ஈத்தவிளை சபை போதகர் பிரின்ஸ், உடந்தை யாக இருந்த களியலை சேர்ந்த சிவகுமார், சுரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 4 பேரும் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த 4 பேரையும் கைது செய்ய போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
    • மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.

    நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.

    • ஆட்டோ ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டுத் தானி வாகனங்களுக்கான பயண கட்டணத்தை 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 10 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், 'தானிகளுக்கான பயண கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினை சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாக தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்

    ஆகவே, தமிழ்நாடு அரசு தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் 'தானி சேவைக்கான முன்பதிவு செயலியை' உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • மலேசியாவிற்கு சென்று சமையல்காரராக பணிபுரிய திட்டமிட்டிருந்தார்.
    • மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் நகரைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். ஒரு லாட்டரி டிக்கெட் விலை 500 ரூபாய். இந்த ஆண்டு 67 லட்சம் ஓணம் பம்பர் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்றிருந்த நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் முன்னிலையில் நேற்று அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது.

    இதில் அனுப் வாங்கியிருந்த டி.ஜே. 750605 என்ற சீரியல் எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. முன்னதாக அவர் ஒரு ஓட்டலில் சமையல்காரராக இருந்த நிலையில், மலேசியாவில் சமையல்காரராகப் பணிபுரிய அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக மலேசியா செல்வதற்காக வங்கி மூலம் அவர் கடன் பெற்றிருந்தார்.

    தற்போது ரூ.25 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதால் அனூப்பும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் மலேசியாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். வருமான வரிப் பிடித்தம் போக அனூப்பிற்கு 15 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓணம் லாட்டரி டிக்கெட் பரிசு அம்மாநில வரலாற்றில் அதிக விலை மதிப்புள்ளதாக கருதப்படுகிறது. 

    ×