பெங்களூரு: ஆட்டோ ஓட்டுனரை செருப்பால் அடித்த இளம்பெண் - வீடியோ வைரல்

இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டினார்.கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு: ஆட்டோ ஓட்டுனரை செருப்பால் அடித்த இளம்பெண் - வீடியோ வைரல்
Published on

கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.

ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் இளம்பெண் அவரை தனது செருப்பால் தாக்கினார்.  

மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

பெங்களூருவில் கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com