என் மலர்
நீங்கள் தேடியது "Bus driver"
- கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
- டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கோபாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (31). இவர் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி வழியாக ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போது இருமன்குளத்தை சேர்ந்த மூக்கையா மகன் சந்திரன் என்பவர் முன்வாசல் வழியாக ஏறியுள்ளார்.
அதற்கு டிரைவர் அழகர்சாமி முன்வாசல் வழியாக பெண்கள் ஏறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பின்வாசல் வழியாக ஏறுங்கள் என சத்தம் போட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேகேட் அருகில் இறங்கிய சந்திரன் நடந்த சம்பவம் பற்றி ஊரில் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த சுரேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் இருமன்குளம் பஸ்நிறுத்தத்தில் நின்றனர். பஸ் சங்கரன்கோவிலுக்கு திரும்ப வரும் போது அவர்கள் டிரைவர் அழகர்சாமியிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்தனர்.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அழகர்சாமியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
சேலத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை பழனிச்சாமி (வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ஆறுமுகம் (47) இருந்தார்.
இதேபோல பழனியில் இருந்த அந்தியூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சிவகாசி (36) என்பவர் ஓட்டி வந்தார். முருகேஷ் (45) கண்டக்டராக இருந்தார்.
இன்று காலை 7.45 மணி அளவில் 2 பஸ்களும் அரச்சலூரை அடுத்த தலவுமலை அருகே உள்ள வெள்ளக்கவுண்டன்வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட பழனி- அந்தியூர் பஸ் டிரைவர் சிவகாசி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
இருந்தபோதிலும் அந்த பஸ்சின் பின் பகுதியில் வலது புறத்தில் சேலம்- கொடைக்கானல் அரசு பஸ் மோதியது. இதனால் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தை நோக்கி பழனி-அந்தியூர் பஸ் சென்றது.
அப்போதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் வேப்ப மரத்தின் மீது பஸ் நேருக்கு நேர் பலமாக மோதாமல் இருக்க திருப்பினார். இருந்த போதிலும் பஸ்சின் பின் பகுதி வேப்ப மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பழனி- அந்தியூர் பஸ்சின் பின் பகுதியும், சேலம்-கொடைக்கானல் பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. சேலம்-கொடைக்கானல் பஸ்சில் இருந்த பயணிகள் தப்பினர்.
ஆனால் பழனி-அந்தியூர் பஸ்சின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர் பெயர் கவுசிக் (34). திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். கார் டிரைவராக இருந்தார். அவருக்கு ஜேஸ்மின் (26) என்ற மனைவியும், அப்ரின் (8) என்ற மகளும், ஆஷிக் (6) என்ற மகனும் உள்ளனர்.
தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த தீபக் (27), பிரேம்குமார் (17), செந்தில் (43), குமாரசாமி (43), யுவராஜ் (24) உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அரச்சலூர் பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது. #tamilnews
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசுந்தரரானாந்த (வயது 38). இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பஸ் புறப்பட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் சென்றபோது திடீரென்று டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்துவிட்டார்.
இதுகுறித்து கண்டக்டர் அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே அங்கு சென்று டிரைவர் கிருஷ்ணா உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவருக்கு மதுகாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.
மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில் ஆனகவுண்டன் குச்சி பாளையம் உள்ளது. இந்த ஊர் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்றது.
அப்போது அங்கு சாலையோரம் இருட்டில் மறைந்து நின்ற மர்ம மனிதர்கள் சிலர் கற்களை எடுத்து அந்த பஸ் மீது சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த பஸ் சென்று விட்டது.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று அதே ஆனகவுண்டன்குச்சி பாளையம் வந்தது. அப்போதும் மர்ம மனிதர்கள் அதன் மீதும் கற்களை வீசினர்.
இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
பின்னர் டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி பஸ் மீது கல்வீசியவர்களை விரட்டினர். அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
நள்ளிரவு ஒரே இடத்தில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது50). இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் ஜெயா (35) என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நான் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாகவே என் மனைவியின் நடத்தையில் சற்று மாற்றம் தெரிந்தது. சம்பவத்தன்று வேலை விட்டு வீட்டிற்கு வந்தபோது ஜெயா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இது குறித்து எனது குழந்தைகளுடன் அடிக்கடி சில செல்போன் எண்களில் பேசி வந்ததாக கூறி உள்ளனர். அந்த எண்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது. அவரையும் தற்போது காணவில்லை. எனவே அவர்தான் எனது மனைவியை கடத்தி சென்றிருக்க கூடும் என சந்தேகம் அடைகிறேன். எனது மனைவியை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் 15 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி (வயது 35) என்ற மனைவியும் விஷால் (வயது 9), நிவாஸ் (வயது 7) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அருணாசலம் திருமலையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். இரவு மீண்டும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 50 பயனிகள் இருந்தனர். பஸ் செங்குன்றத்தை அடைந்தபோது அருணாசலத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவர் சென்குன்றம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தி அங்குள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். பின்னர் பஸ் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு பஸ் ஊத்துக்கோட்டையில் சிறுது நேரம் நின்று விட்டு திருமலைக்கு புறப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிச்சாட்டூரில் அருணாசலத்துக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அருணாசலம் அங்குள்ள மருந்து கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் சென்றதும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்தார். அங்கேயே அவர் இறந்து விட்டதும் தெரியவந்தது. இறக்கும் நேரத்தில் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது குறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். பின்னர் மாற்று டிரைவர் மூலம் பயணிகள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது.
பஸ்சில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ்சை விஜய் என்பவர் ஓட்டினார். பஸ் காங்கயத்தில் கிளம்பியது முதலே டிரைவர் தாறுமாறாக இயக்கியுள்ளார். பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுனரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வந்த பஸ் ராஜேஸ்வரி திடல் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த தனபாக்கியம்(50) என்ற பெண் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் விஜய்க்கு தர்ம அடி கொடுத்து மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை இயங்கும் முள்ளுப்பாடியை சேர்ந்த முருகானந்தம் (வயது 28) என்பவர் பஸ் ஓட்டும்போது அடிக்கடி செல்போன் பேசுவதாக பயணிகள் புகார் கூறினர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு இந்த பஸ் சென்றபோதும் அவர் செல்போன் பேசியவாறு பஸ்சை ஓட்டினார். இதை வீடியோவாக பதிவு செய்த சில பயணிகள் ஆதாரத்துடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரையடுத்து, நூதன தண்டனை வழங்க முடிவு செய்த டி.எஸ்.பி. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து, பஸ் டிரைவர் முருகானந்தத்தை நேற்று (வியாழக்கிழமை) ஒருநாள் முழுவதும் பொள்ளாச்சி காந்திசிலை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று காலையில் இருந்து மாலை வரை முருகானந்தம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த நூதன தண்டனையால், போக்குவரத்து விதிகளை டிரைவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Cellphone #BusDriver