என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் ஆம்னி பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர்கள்
- ஆம்னி பஸ்சை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.
- காரில் வந்த 2 வாலிபர்களுக்கும்,மகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது.
தாக்குதல்
அந்த பஸ்சை புதுச்சேரி மாநிலம் பெரியார்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்த போது அங்கு ஒரு காரில் சில பயணிகள் வந்தனர்.
அவர்களை பஸ்சில் ஏற்றுவதில் அந்த காரில் வந்த 2 வாலிபர்களுக்கும், பஸ் டிரைவரான மகேந்திர னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறில் ஆத்திர மடைந்த 2 வாலிபர்களும் மகேந்திர னை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய தாகவும் கூறப்படுகிறது.
போலீசார் வலைவீச்சு
இது தொடர்பாக மகேந்தி ரன் அளித்த புகாரில் பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அந்த நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்த சேகர், ஆறுமுகம் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






