பல்லடத்தில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய 6 பேர் கைது

பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் ஈஸ்வரன் (வயது 26). இவர் தனியார் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அந்த பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமான அந்தப் பெண்ணிடம் பழகுவதை நிறுத்தக் கோரி அவரது தம்பி மற்றும் உறவினர்கள் ஈஸ்வரனை எச்சரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் நண்பரை சந்திக்க ஈஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவரைத் தேடி வந்த சிலர் அவரிடம் பேச வேண்டும் என கூறி அவர்கள் வந்திருந்த காரில் ஏறச் சொன்னபோது ஈஸ்வரன் மறுத்துள்ளார். இதனால் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து உஷாரான போலீசார், பல்லடம் நால் ரோட்டில் வைத்து அந்த காரை மடக்கி பிடித்தனர் .பின்பு அதிலிருந்த ஈஸ்வரனை மீட்டனர். அவரை கடத்திய செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), தமிழ் (23), சபரிநாதன்(22), வினோத்குமார்(25), சுந்தர் (24),அருண்குமார்(24),நித்திஷ்(25) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com