தனியார் பள்ளி பஸ் டிரைவர் வெட்டிக் கொலை

ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடக்கும் மாரிமுத்து.
பிணமாக கிடக்கும் மாரிமுத்து.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com