என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடிய 2 பேர் கைது
  X

  ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
  • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  ஈரோடு:

  ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

  அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

  திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

  Next Story
  ×