search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Makkal Munnetra kazhagam"

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2-ம் ஆண்டு விழா வருகிற 15-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. விழாவில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று கட்சிக் கொடி ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து வார்டு அவைகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    அப்போது தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது. #LSPolls #AMMK #TTVDhinakaran
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் வருகிற 28-ந்தேதி வெளியிட உள்ளதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். #TTVDhinakaran #AMMK
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று மாலை ஓமலூரில் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் மேச்சேரி, குஞ்சாண்டியூர், மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார்கள். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கோர்ட்டுக்கு சென்றவர்கள் மற்றும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று கூறியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். கூட்டணி என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள்.

    நீங்கள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதே நேரத்தில் எங்களுக்கு கூட்டணி எதற்கு, ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம். இதன் மூலம் மேச்சேரி பகுதியில் உள்ள குளங்களை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் இருந்தும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு பயந்து தானே கூட்டணி சேர்க்கிறார்கள்.


    பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா அவரது கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக தமிழகம் வந்து சென்று இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நினைக்கிறோம். 2 கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். வருகிற 28-ந்தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அணி என்பதில் முதல் அணியாக இருக்கப்போவது அ.ம.மு.க.தான். மக்கள் விமர்சிக்காத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். முதல்-அமைச்சர் வேட்பாளர் என்றும், மாற்றம், ஏமாற்றம் என்று அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்தனர். அவரே வெற்றி பெறாத நிலையில் பெரிய கட்சி என்று நினைக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என்று தே.மு.தி.க. தலைவர் சொன்னார். எனவே அவர்களுடன் கூட்டணியில் செல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #AMMK
    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அந்தியூரில் நடந்த மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    அந்தியூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    அந்தியூரில் திறந்த வேனில் நின்றபடி டி.டி.வி.தினகரன் பேசியபோது எடுத்த படம்.

    தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் நாம் கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் தங்களுடைய குறைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை அழைத்து பேசாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மிரட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை அரசு கண்டு கொள்வதில்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தையில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    குக்கர் சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் தங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத கட்சி. அதனால் அவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

    ஏற்கனவே ஐகோர்ட்டில் சின்னமும், கட்சியையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி தள்ளி வைத்து வழக்கை ஐகோர்ட்டு நடத்தட்டும் என்று கூறி வழக்கு நடந்து கொண்டிருப்பதால் எங்கள் கட்சியை நாங்கள் பதிவு செய்ய முடியவில்லை.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் எங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என்று சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்றியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வாய்ப்பு இருக்கும்.

    தூத்துக்குடியில் மக்கள் மீண்டும் கொந்தளிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதனை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்ததால் வாரிசு அரசியல் என்று காங்கிரசுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பதாக பா.ஜனதா சொல்கிறது. மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவிற்கு பிறகு தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கட்சியில் அப்பா இருக்கிறார் என்பதற்காகவே அவரது வாரிசுகள் அந்த கட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிலைக்க முடியும். வாரிசு அரசியல் என்று வாதத்திற்கு வேண்டுமானால் சொல்லலாம்.

    போயஸ் கார்டன் வீடு எனக்கு தெரிந்து ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. அதனை யார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. தெரியாத ஒன்றிக்கு பதில் சொல்ல முடியாது.

    தினகரன்-அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார். அம்மாவின் மறைவிற்கு பிறகு போயஸ்கார்டனில் என்னையும், சசிகலாவையும் அவர் சந்தித்து விட்டு சென்றார்.

    நீங்கள் கூறுவது போல அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என்று எனக்கோ, சசிகலாவுக்கோ, பா.ஜனதாவோ அல்லது வேறு யாரோ எந்தவித அழுத்தமும் தரவில்லை. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதுதான் உண்மை.

    அ.தி.மு.க.வும், நாங்களும் ஒன்று சேர்வது என்பது நடக்காத வி‌ஷயம். அதனை ஏற்கனவே பலமுறை நான் கூறி விட்டேன். அதனால் இது சம்பந்தமாக திரும்ப திரும்ப கேட்டு மக்களை எரிச்சல் அடைய வைக்காதீர்கள்.

    தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நாங்கள் நியமித்துள்ளோம். தொகுதிக்கு குறைந்தது 3 ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமித்து விட்டு எப்படி அ.தி.மு.க.வுடன் நாங்கள் போய் சேர முடியும். எங்களின் தொண்டர்களை குழப்புவதற்காகத்தான் இணைப்பு என்று கிளப்பி விடுகிறார்கள்.

    வினய்குமார் அறிக்கையில் சசிகலாவுக்கு 4-5 அறைகள் ஒதுக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகம் தனி பிளாக்கில் தான் சசிகலாவை தங்க வைத்து இருக்கிறார்கள். அதனால் சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை.

    அதிகபட்சம் 45 நிமிடங்கள் தான் சசிகலாவை சந்திக்க அனுமதிப்பார்கள். அதற்கு மேல் பார்க்க விடுவதில்லை. மற்ற உறவினர்களையும் அதுபோலத்தான் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினரகன் காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினரகன் காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொண்டு 28 இடங்களில் பேசுகிறார். அவர் பேசும் இடங்கள் வருமாறு:-

    நாவளூர்-மாலை 4.30 மணி, கேளம்பாக்கம்-மாலை 5 மணி, திருப்போரூர்-மாலை 5.30 மணி, மானாம்பதி-மாலை 6 மணி, திருக்கழுக்குன்றம்- மாலை 6.30 மணி, நெரும்பூர்-இரவு 7 மணி, புதுப்பட்டினம்-இரவு 7.30 மணி, சட்ராஸ்-இரவு 7.45 மணி, வெங்கப்பாக்கம் கூட்ரோடு-இரவு 8 மணி, மாமல்லபுரம்-இரவு 8.30 மணி, கோவளம்-இரவு 9 மணி, கானாத்தூர் ரெட்டிக்குப்பம்- இரவு 9.30 மணி.

    கூவத்தூர்-மாலை 4.30 மணி, பெளஞ்சூர்-மாலை 5 மணி, செய்யூர்-மாலை 5.30 மணி, கடப்பாக்கம்-இரவு 6 மணி, சூனாம்பேடு-இரவு 6.30 மணி, சித்தாமூர்- 7மணி, அச்சரப்பாக்கம்-இரவு 8மணி, சோத்துப்பாக்கம்- இரவு 8.30 மணி.

    ஊரப்பாக்கம்-மாலை 5 மணி, கூடுவாஞ்சேரி-மாலை 5.30 மணி, மறைமலைநகர் நகராட்சி- மாலை 6 மணி, சிங்கப்பெருமாள் கோவில் மாலை 6.30 மணி, செங்கல்பட்டு நகராட்சி- மாலை 7 மணி, படாளம் கூட்ரோடு-இரவு 7.30 மணி, கருங்குழி பேரூராட்சி-இரவு 8 மணி, மதுராந்தகம் நகராட்சி-இரவு 8.30 மணி.
    அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #BJP
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். தற்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

    அவர் அ.தி.மு.க. தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து தாய் கழகத்தில் இணைய வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும் என்று புதுச்சேரி வந்த மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்தார்.

    தினகரன் எனது நண்பர். அ.தி.மு.க.வின் இரு பிரிவுகளும் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் செயல்பட வேண்டும். இரு தரப்பினரும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்து தேர்தலை சந்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பரமக்குடி வந்த தினகரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-


    ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது.

    அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக 4 தென் மாவட்டங்களின் அ.ம.மு.க. வின் தகவல்-தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் பேசுகையில், “அ.ம.மு.க. சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மதவாத சக்திகளுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்” என்றார்.

    மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங்களையும் அ.ம.மு.க. நிறைவேற்ற பாடுபடும். குறிப்பாக பெண்கள் நலனுக்காக நீண்ட கால திட்டமான பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவோம், ஜெயலலிதா காட்டிய பாதையில் படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என்றும் தினகரன் பேசினார். #TTVDhinakaran #ADMK #BJP
    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது. அது விரைவில் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்று புகழேந்தி கூறினார். #Pugazhendhi #OPS #EPS
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளா புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா கொடுத்த பதவியை தவறாக பயன்படுத்திய துரோகி எடப்பாடி. எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தொண்டர்கள், பொது மக்களை காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அவர்களாக வருகின்றனர்.

    ஆனால் முதல்வர் சாத்தூர் வந்த போது கட்சியினரும், போலீசாரும் மட்டுமே இருந்தனர். பொது மக்கள் யாரும் செல்லவில்லை. தேர்தல் வந்தால் யாருக்கு டெபாசிட் கிடைக்காது என்பதை பொது மக்கள் தீர்மானிப்பார்கள்.

    எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். துரோகம் செய்ய எங்களுக்கு தெரியாது.

    தினகரன் கட்சிக்காக பாடுபட்டது குறித்து உடனிருந்த துணை முதல்வர் பன்னீருக்கு நன்றாக தெரியும். தினகரன் ஜெயிலுக்கு போனாரா என கேட்கும் முதல்வர் எத்தனை முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியதால் இடைதேர்தல் நடத்த தமிழக அரசு நாதியற்ற அரசாக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே தகராறு தொடங்கி விட்டது விரைவில் வெளி உலகத்துக்கு அது தெரிய வரும்.

    கொடநாடு கொலைக்கான காரணம் விசுவரூபம் எடுத்து வருகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவன் என தமிழக மக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். முதல்வரை கொலைகாரனாக மக்கள் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஏழாயிரம்பண்ணையில் நடந்த பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:-

    இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் வேட்பாளர் வெற்றி பெறமுடியாது என கட்சியினர் அவரிடம் தெரிவித்ததால் தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை தள்ளி போடச் சொல்லி மனு கொடுத்தனர்.

    8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார்.

    தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்கவில்லை.

    ஆனால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.

    ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்க கூடிய தலைவர் தினகரன் மட்டுமே.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Pugazhendhi #OPS #EPS
    ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை அ.தி.மு.க. அரசு ஏமாற்றி வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPS
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.ம.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் 2 நாட்கள் நடந்தது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    2-வது நாளான நேற்றும் பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பேசினார். அப்போது வருகிற தேர்தல்களில் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கிராமங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சுற்று பயணத்தின்போது டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தென் மாவட்டங்கள் சிறப்புடன் இருக்க வேண்டும். ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் பொது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற எண்ணம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. பொதுமக்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. அமைச்சர்கள்தான் நன்றாக உள்ளனர்.

    அ.ம.மு.க. அனைத்து மதத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பொதுவான கட்சி. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம்.

    தமிழக முதல்வரும், 33 அமைச்சர்களும் டெல்லிக்கு ஏவல் வேலை செய்து வருகிறார்கள். ஜெயலலிதா பெயரை சொல்லி இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. சசிகலா சொன்னதால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா முதல்வராக்கினார். ஆனால் அவர் வடக்கில் இருந்தவர்களுக்கு ஏஜெண்டாக மாறினார்.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டதால் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினோம். எடப்பாடி பழனிசாமியையும் முதல்வராக்கியது சசிகலா தான். ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன் வடக்கில் உள்ளவர்கள் சொன்னதை கேட்டு சசிகலாவையும், என்னையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

    எங்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் என்ன தவறு செய்தார்கள்? தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றி அமைக்க மக்களவை, சட்டபேரவை தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, ரத்தினசபாபதி, அமைப்பு செயலாளர்கள் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பரமக்குடி நகர் செயலாளர் சுப்பிரமணியன், கீழக்கரை நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPS
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #BJP
    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். தே.மு.தி.க. , பா.ம.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் பேசி கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது கூற மாட்டேன்.

    பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூறமுடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    தி.மு.க., மெகா கூட்டணி, எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.


    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால்அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன் ,எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர் செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விரக்தியில் தம்பிதுரை பலவாறு பேசி வருகிறார்.

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #BJP
    தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நாளை பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #EC #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சமீபத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தினகரன் தனது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே திருவாரூர் இடைத்தேர்தல் திடீர் என்று ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் தினகரன் தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நாளை பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #EC #TTVDhinakaran
    அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    கும்பகோணம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கும்பகோணம் அடுத்த திம்மங்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கொடநாடு பிரச்சனை பற்றி..?

    பதில்:-கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக நடந்து கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய குற்றவாளிகளை கைது செய்ய டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி உள்ளனர். மேலும் கோர்ட்டில், குற்றவாளிகளை காவலில் எடுக்க ஆஜர்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ பதட்டமும், அவசரத்துடன் தமிழக அரசு செயல்பட்டதாகவே தெரிகிறது.

    கொடநாடு எஸ்டேட் 5 பேர் கொலையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வழக்கு விசாரணை வரும்போது சந்தித்து இருக்கலாம். ஆனால் அவசர அவசரமாக டெல்லிக்கு காவல்துறையை அனுப்பி செயல்படுகிறார்கள் என்பதால் சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து..?

    பதில்:- பாராளுமன்ற தேர்தலில் ஒருசில கட்சிகள் கூட்டணி குறித்து எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டு சென்றால் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றது போல் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. தனியாக போட்டியிடும்.

    மக்கள் ஆதரவு என்றும் முழுமையாக எங்களுக்கு உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்களது எம்.பி.க்கள் வெற்றி பெறுவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


    கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வசதியுடன் உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே?

    பதில்:- 60-40 என்ற வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். தி.மு.க.வினர் கேட்கும் டெண்டர்கள் உடனே வழங்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலினும், தினகரனும் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் புலம்பினார். ஆனால் இப்போது அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர். இதை அமைச்சர் ஜெயக்குமார் ஒத்துக்கொள்கிறாரா?

    கஜா புயல் பாதித்த நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. - தி.மு.க.வினரை கிராம மக்கள் உள்ளே விடவில்லை. ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் கூட்டணியாக உள்ளனர் என்பதால் தான் அவர்களை கிராமங்களுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கவில்லை.

    திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர் காமராஜ் தான் வெற்றி பெற்றிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #DMK #ADMK
    ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய பொங்கல் பரிசு திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


    முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.

    இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்து என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் ஆளும் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர் புகுந்து இலவசமாக வழங்கப்பட்ட 1,000 ரூபாயில் 100 ரூபாயை பயனாளிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு போனதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

    இப்படி நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடந்த தவறுகளைத் திருத்தி, மீதமுள்ளவர்களுக்காவது நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran
    ×