search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankulam"

    • இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சார்பில் கற்க கசடற கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது.
    • இதில் 5 கிலோமீட்டர் ஓட்ட பந்தயத்தில் 10-ம் வகுப்புக்கு உட்பட்ட 14 வயதுடைய மாணவர்கள் பிரிவில் முதலாவதாக அஜிதா, 2-வதாக ஜெயபாரதி, 3-வதாக அட்லின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகிலுள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சார்பில் கற்க கசடற கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது. ஸ்டஅக் ஹைடெக் பள்ளி வளாகத்தில் தொடங்கிய போட்டியை பள்ளித்தலைவர் முருகன், தென்காசி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 5 கிலோமீட்டர் ஓட்ட பந்தயத்தில் 10-ம் வகுப்புக்கு உட்பட்ட 14 வயதுடைய மாணவர்கள் பிரிவில் முதலாவதாக அஜிதா, 2-வதாக ஜெயபாரதி, 3-வதாக அட்லின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் சுமன்குமார், கருத்த பாண்டி, கபின் மாதேஷ், பிரவீன், முருகன் ஆகியோர் முதல் 5 இடங்களையும், பெண்கள் பிரிவில் லாவண்யா, சவுமியா, கார்த்திகா, சங்கீதா, அனுஷ்கா ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றனர்.

    10 கிலோமீட்டர் பந்தயத்தில் ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அஜித்குமார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனுஜ், கென்யா நாட்டைச் சேர்ந்த எலிஜா கேமேய் ஆகியோர் முதல் 3 பரிசுகளை பெற்றனர். பெண்கள் பிரிவில் கென்யா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் முயங்கா, கவுசிகா, கனகலட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் முன்பு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து, ஸ்டக் ஹைடெக் பள்ளியின் செயலர் ஆகாஷ், பள்ளியின் மூத்த ஆலோசகர் ஜோசப், பேரூராட்சி துணை த் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆகாஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் செல்லபாண்டியன், ஸ்டஅக் ஹைடெக் பள்ளிதலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பைகள் ஆகியவற்றை வழங்கினர்.

    விழாவில் பள்ளியின் பயிற்சியாளர் நிகில், நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கோபி சங்கர், சுரேஷ், சுரேஷ் தங்க கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் வருகிற 28-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவை சிறப்பாக வரவேற்று, கண்டன ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைதலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் சந்துரு சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் திருமலை செல்வம் வரவேற்றார்.

    கூட்டத்தில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இப்பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளையை கன்டித்தும் வருகிற 28-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவை சிறப்பாக வரவேற்று, கண்டன ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர், விஜயகாந்த் மன்ற மாவட்ட செயலாளர் சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் அருணா, சமுத்திரபாண்டியன், ரவிச்சந்திரன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜன், கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது.

    ஆலங்குளம்:

    சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). எலக்ட்ரீசியன். கீழச்சுரண்டை சேர்ந்தவர் தங்கசாமி (59). தொழிலாளி. இவர்கள் இருவரும் ஆலங்குளம் சென்று விட்டு நேற்றிரவு சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    ஆலங்குளத்தை அடுத்துள்ள முத்துகிருஷ்ண பேரி அருகே சென்றபோது சுரண்டையில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்களது மோட்டடார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜன் முகத்தில் அடிபட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கசாமிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது .

    இச்சம்பவம் குறித்து அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பாக்கியராஜ் நெல்லையில் தங்கியிருந்து ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • அவர்கள் இன்று அதிகாலை வேலைக்காக நெல்லைக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

    அரசு பஸ் மோதி விபத்து

    பாக்கியராஜ் நெல்லையில் தங்கியிருந்து ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார் (28) என்பவரும் பணியாற்றி வருகிறார். நண்பர்களான 2 பேரும் நேற்று ஊருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலை வேலைக்காக நெல்லைக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றனர்.

    மொபட்டை பிரேம்குமார் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அவர்கள் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை பகுதியில் சென்ற போது எதிரே தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ், மொபட் மீது மோதியது.

    தொழிலாளி பலி

    இதில் பின்னால் இருந்த பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரேம்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாக்கியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது மோதிய அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், பழ ஜூஸ் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பசுபதி, நகரச் செயலாளர் சுப்ரமணியன், தெற்கு ஒன்றியசெயலாளர் வெள்ளத்துரை, பொறுப்பு குழு பாண்டியராஜன், ஆலங்குளம் பேரூராட்சி துணை சேர்மன் ஜான் ரவி, நகர துணைச் செயலாளர் சாலமோன், மாவட்ட பிரதிநிதிகள் மாரியப்பன், தேவதாஸ், சுப்புலட்சுமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை தனபால் நிக்சன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், நகர இளைஞரணி குமரன், மகளிர் அணி முத்துலட்சுமி, 9-வது வார்டு செயலாளர் பெரிய பாண்டியன், 8-வது வார்டு செயலாளர் சத்தியராஜ், 4-வது வார்டு செயலாளர் ஜெயசிங், குருவன்கோட்டை கிளை வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், பழ ஜூஸ் வழங்கப்பட்டது.

    • மணிகண்டன் கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.
    • ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர்.

    வெட்டிக்கொலை

    இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை ஓடஓட விரட்டி ெவட்டிக்கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    முன்விரோதம்

    அதில், கடந்த 2021-ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரகுளம் நெட்டூரை சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக மணிகண்டனும் சேர்க்கப்பட்டார். அந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மணிகண்டன் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் கிடாரகுளம் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • விடாமல் துரத்திய கும்பல் மணிகண்டனை வெட்டிக் கொன்றது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிடார குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). பொக்லைன் ஆபரேட்டர்.

    வெட்டிக் கொலை

    இவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் கிடார குளம் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கியது.

    உடனே மணிகண்டன் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஊருக்குள் ஓடினார். எனினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடந்த 2020-ம் ஆண்டு ஒரு வழக்கில் ஆடு திருட்டு கும்பல் தொடர்பாக மணிகண்டன் போலீசாருக்கு சில தகவல்களை தெரிவித்த தாக கூறப் படுகிறது.

    முன்விரோதம் காரணமா?

    இதுதொடர்பாக அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், இப்பிரச்சினையால் மணிகண்டன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது பெற்றோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் புகார் மனு அளித்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மணிகண்டன் இன்று ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே முன்விரோதம் காரணமாக ஆடு திருட்டு கும்பலால் மணி கண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப் படைகள் அமைக்கப் பட்டுள்ளது.

    • விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், வீராணம் ஒன்றிய குழு உறுப்பினர் ஷேக்முகமது, வீராணம் கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருவந்தா கிராமத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
    • ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழிகாட்டுதலின் படி ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் கருவந்தா கிராமத்தில், தி.மு.க.வில் 1 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை அடையும் வண்ணம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை யூனியன் சேர்மன் திவ்யா மணிகன்டண் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பூத் கமிட்டி பொறுப்பாளர் கடங்கனேரியை சேர்ந்த அய்யம்பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்பால்துரை மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திலீப்ராஜா மற்றும் கருவந்தா கிளை செயலாளர்கள், ஊத்துமலை மாவட்ட பிரதிநிதி ராமசந்திரன், அரசு ஒப்பந்தக்காரர் பொன்தாய்ஆனந்த், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் படித்துரை மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். அவர்களுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று, மாற்றுத்திறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் அருள்சுப்பிரமணியன், ஆலங்குளம் வட்டார வள மைய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஆசிரியர்கள் அருள்ஞானஜோதி மற்றும் ஜெயஜோதி, மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியை பிரியா மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிக்களுக்கான உதவித்தொகை, இலவச பஸ்பாஸ் போன்ற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இரண்டு நபர்களுக்கு செவித்திறன் கேட்டல் கருவி வழங்கப்பட்டது.

    • வட்டார அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு திருவிழா யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறந்த ஊட்டச்சத்து உணவு வகைகளை தயாரித்த சுய உதவிக்குழுக்களை தேர்ந்தெடுத்து திவ்யா மணிகண்டன் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தென்காசி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வட்டார அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு திருவிழா யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து ஊராட்சி களையும் சார்ந்த சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த ஊட்டச்சத்து உணவு வகைகளை பரிமாறி னர். இதில் சிறந்த ஊட்டச்சத்து உணவு வகைகளை தயாரித்த சுய உதவிக்குழுக்களை தேர்ந்தெடுத்து திவ்யா மணிகண்டன் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு பார்த்த சாரதி தலைமை தாங்கினார்.
    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பார்த்த சாரதி தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை திணித்தது, நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன்,மாவட்ட செயலாளர் துரை டேனியல் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    ×