search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Marathon"

    • இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சார்பில் கற்க கசடற கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது.
    • இதில் 5 கிலோமீட்டர் ஓட்ட பந்தயத்தில் 10-ம் வகுப்புக்கு உட்பட்ட 14 வயதுடைய மாணவர்கள் பிரிவில் முதலாவதாக அஜிதா, 2-வதாக ஜெயபாரதி, 3-வதாக அட்லின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகிலுள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சார்பில் கற்க கசடற கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது. ஸ்டஅக் ஹைடெக் பள்ளி வளாகத்தில் தொடங்கிய போட்டியை பள்ளித்தலைவர் முருகன், தென்காசி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 5 கிலோமீட்டர் ஓட்ட பந்தயத்தில் 10-ம் வகுப்புக்கு உட்பட்ட 14 வயதுடைய மாணவர்கள் பிரிவில் முதலாவதாக அஜிதா, 2-வதாக ஜெயபாரதி, 3-வதாக அட்லின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் சுமன்குமார், கருத்த பாண்டி, கபின் மாதேஷ், பிரவீன், முருகன் ஆகியோர் முதல் 5 இடங்களையும், பெண்கள் பிரிவில் லாவண்யா, சவுமியா, கார்த்திகா, சங்கீதா, அனுஷ்கா ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றனர்.

    10 கிலோமீட்டர் பந்தயத்தில் ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அஜித்குமார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனுஜ், கென்யா நாட்டைச் சேர்ந்த எலிஜா கேமேய் ஆகியோர் முதல் 3 பரிசுகளை பெற்றனர். பெண்கள் பிரிவில் கென்யா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் முயங்கா, கவுசிகா, கனகலட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் முன்பு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன் தலைமை தாங்கினார். பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து, ஸ்டக் ஹைடெக் பள்ளியின் செயலர் ஆகாஷ், பள்ளியின் மூத்த ஆலோசகர் ஜோசப், பேரூராட்சி துணை த் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆகாஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட தடகள சங்கச் செயலாளர் செல்லபாண்டியன், ஸ்டஅக் ஹைடெக் பள்ளிதலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பைகள் ஆகியவற்றை வழங்கினர்.

    விழாவில் பள்ளியின் பயிற்சியாளர் நிகில், நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கோபி சங்கர், சுரேஷ், சுரேஷ் தங்க கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×