ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பார்த்த சாரதி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.  
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.  
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பார்த்த சாரதி தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை திணித்தது, நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன்,மாவட்ட செயலாளர் துரை டேனியல் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com