ஆலங்குளம் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.
தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், வீராணம் ஒன்றிய குழு உறுப்பினர் ஷேக்முகமது, வீராணம் கிளை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், அமானுல்லா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com