search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankulam"

    • கடையின் அருகே உள்ள காலியிடத்தில் திருமலைகுமார் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார்(வயது 40). இவர் அப்பகுதியில் நெல்லை-தென்காசி சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

    இவர் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கடையின் அருகே உள்ள காலியிடத்தில் அவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். புகையிலையையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    • ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது
    • நிரந்தரமாக இன்ஸ்பெக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் உட்கோட்டத்தில் ஆலங்குளம், வி.கே.புதூர், ஊத்துமலை, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உட்கோட்டத்தின் தலைமையிடமான ஆலங் குளம் போலீஸ் நிலையத்தில் அண்டை கிராமங்களை சேர்ந்த புகார்கள் விசாரி க்கப்பட்டு வருகிறது.

    வளர்ந்து வரக்கூடிய நகரமான ஆலங்குளத்தில் தினமும் வரும் புகார்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை எனவும், நிரந்தரமாக நிய மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அம்பை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்ப ட்டார். அதன் பின்னர் கடந்த 2 மாதங்களாக ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பு என்பதால் ஆலங்குளத்திற்கு அடிக்கடி வருவதில்லை.

    இதனால் புகார்கள், கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களும் தன்னிச்சையாக செயல் படுவது போல் தோன்று கிறது. எனவே உட னடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்றனர்.

    • உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சூதாட்டம்

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 7 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து நடத்திய விசாரணை யில் அங்கிருந்தவர்கள் உடையாம்புளியை சேர்ந்த ரவி (60), முத்துக்கண்ணன் (37), வீரவநல்லூரை சேர்ந்த அங்கப்பன் (49), கிருஷ்ணாபுரம் பெரியசாமி (40), நாகல்குளம் காசிப்பாண்டி (40), அம்பாசமுத்திரம் ஜெகநாதன் (60), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் (33) ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆலங்குளம்:

    நெல்லை திருமண்டலம் நல்லூர் சேகரம் கரும்புளியூத்து திருச்சபையில் 2023 ஆண்டின் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெற்றது. விடுமுறை காலங்களில் 15 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றன. இந்த வருடத்தின் தலைப்பு "காலம் இதுவே" இதன் அடிப்படையில் 15 நாட்களும், வசனம், வேதாகம கதைகள், உண்மை சம்பவம், பாடல்கள், நடனம் கற்று கொடுக்கப்பட்டன.

    மேலும் விதவிதமான குளிர்பானங்கள், உணவு கொடுக்கப்பட்டது. இதை முன்னின்று வக்கீல்கள் ரமேஷ், சதீஷ்குமார் மற்றும் பிரபா, ஷர்மிளா, பால்டுவின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 8-வது நாள் தியான சுற்றுலாவாக தோட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உணவு மற்றும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு மகிழ்ச்சியாக விளையாடினர்.

    10-வது நாள் இன்ப சுற்றுப்பயணமாக அழைத்து செல்லப்பட்டது. கடைசி நாளில் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சேகர தலைவர் பிரே ஜேம்ஸ் மற்றும் கரும்புளியூத்து திருமண்டல சபை ஊழியர் ஜாண் பிரேம் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கரும்புளியூத்து சபைமக்கள், தொழிலதிபர்கள் திருவெங்கடேஷ் ஜாஸ்வா மற்றும் செல்வராணி உரிமையாளர் பிரின்ஸ் தங்கம் நன்கொடை வழங்கினார்கள்.

    • ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாள் கீழப்பாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். இன்று நெட்டூர், நாளை (26-ந்தேதி) புதுப்பட்டி, 30-ந்தேதி வெங்கடாம்பட்டி, 31-ந்தேதி ஆலங்குளம் குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணவேல், கீழப்பாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.க்கள், நில அளவைப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார்.
    • பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நெல் ஆராய்ச்சி நிலையம் அம்பையில் இருந்து வெளியிடப்பட்ட புதிய நெல் ரகம் அம்பை 21 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் ஆராய்ச்சி நிலையம், சிற்றாறு உப வடிநில பகுதி கிராமமான நல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு அம்பை 21 ரகம் பற்றிய சிறப்பு பண்புகள் , உற்பத்தி செய்யும் முறைகளை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் எடுத்துரைத்தார். நோய் தாக்குதல் மற்றும் அதனை மேலாண்மை செய்யும் முறைகள் பற்றி ரஜினிமாலா எடுத்துரைத்தார். மேலும் பூச்சி தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆல்வின் எடுத்து கூறினார்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நாகேந்திரன் மற்றும் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் அருண்சசிக்குமார் , சுடலைஒளிவு ஆகியோர் செய்தனர். கூட்டத்தில் நல்லூர் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • தி.மு.க.வை சேர்ந்த முருகன் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    • மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
    • மாணவி லிபினா அருள், யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளியில் பிளஸ் -2 வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுதேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று முதல் ஆண்டிலேயே 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது.இதில் மாணவி சம்ரித்தா பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளாக 10-ம் வகுப்பிலும் 100 சதவீத தேர்ச்சி என்ற உச்சம் தொட்டுள்ளது. 10-ம் வகுப்பில் மாணவி லிபினா அருள் மற்றும் யாபியா ஜோஸ் ஆகியோர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும், தனுபிரபா, ஜெசிந்த் ஹெப்சிபா மற்றும் ஸ்வீட்லின் அனி ஆகியோர் தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி மற்றும் முதல்வர் பிரவின்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

    • இசக்கிமுத்து சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • லாரி மீது இசக்கிமுத்து மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வடமலைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கனகு. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 30). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி இரவு வேலையை முடித்துவிட்டு ஆலங்குளத்தில் இருந்து அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். காளத்திமடம் விலக்கு அருகே சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் இசக்கிமுத்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று கொண்டிருந்த வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை எதிர் கூண்டில் நின்ற கணேசன் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையின் போது நீதிபதி முன்பு வைத்தே இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய கணேசனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும், கணேசனிடம் இனி இந்த தவறு நடக்காது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
    • கூட்டத்தில் சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரவிக்குமார், அன்னத்தாய், ஆரோக்கியமேரி, பபிதா, உமாதேவி, அன்னக்கிளி, சுபாஷ்சந்திர போஸ், சுந்தரம், வென்சிராணி, சாலமன் ராஜா, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் ஜான்ரவி நன்றி கூறினார்.

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது.
    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தூசி. செல்வராஜ், அமைப்புச் செயலர்கள் தங்கசாமி, மாவட்ட செயலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வழக்குரைஞர் அணி பொருளாளர் பால்ராஜ் வரவேற்றார்.   பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், மாநில துணைத் தலைவர் லூர்து, வர்த்தக அணித் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    கூட்டத்தில் நான்கு வழிச்சாலைப் பணியால் தற்போதுள்ள காமராஜர் சிலை  அகற்றப்பட உள்ளதால், வேறு புதிய இடத்தில் காமராஜர் சிலை நிறுவ அனுமதி அளிக்க வேண்டும், பனைத் தொழி லாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வழக்குரைஞர் நெல்சன், அருணாசலம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
    ×