search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killers"

    • மணிகண்டன் கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.
    • ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர்.

    வெட்டிக்கொலை

    இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை ஓடஓட விரட்டி ெவட்டிக்கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    முன்விரோதம்

    அதில், கடந்த 2021-ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரகுளம் நெட்டூரை சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நெட்டூரை சேர்ந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக மணிகண்டனும் சேர்க்கப்பட்டார். அந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட வாலிபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதுதெரிய வந்தது.
    • அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தியதில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.

    இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் படி ஆய்வு செய்தபோதுதான் கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்களுடன் மது குடிக்க சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் போதுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

     இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித் குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர்என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை சிறைக்கு சென்றுள்ள தனிப்படை போலீசார் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தயார் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது.
    • பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.

    இந்தநிலையில் பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனர்.

    மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாரேனும் பாலசுப்பிரமணியனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியன் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யார் யாருடன் பழக்கம் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.   

    டிராக்டர் டிரைவர் படுகொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மேலூரில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள மேலவளவு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (வயது 21). டிராக்டர் டிரைவரான இவரை, நேற்று மர்ம கும்பல் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சபரீஸ்வரன், மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரீஸ்வரன் உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக்கூறிய அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மேலூர், மேலவளவு, பட்டூர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இன்று காலை சபரீஸ்வரனின் உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்புள்ள அழகர்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

    இந்த நிலையில் மேலூர் பஸ் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியும், மறியல் கைவிடப்பட வில்லை. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    ×