search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increased"

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டிய ல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 727 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 22 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

    • சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.
    • போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர்.

    அவிநாசி,

    அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி, பான் பராக், குட்கா விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் அவிநாசி பஸ் நிலையம் ,கருவலூர் உள்ளிட்ட இடங்களில் குட்கா விற்பனை செய்த வியாபாரிகளை கைது செய்தனர்.

    போலீசார் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக், குட்கா போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வரும் வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரமாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் வாங்கி, மளிகைக்கடை, பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.கடைக்காரர்கள்ஒரு பாக்கெட் 10 முதல்15 ரூபாய் என்ற விலையில் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு பாக்கெட் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கின்றனர்.

    ஒரு பாக்கெட்டுக்கு 35 முதல் 40 ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து விற்பதன் மூலம் தினமும்சில ஆயிரம் ரூபாயை கண்ணில் பார்த்து விடுகின்றனர். இந்த வியாபாரத்தில் ருசி கண்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்தாலும் மீண்டும் அதே தொழிலை செய்கின்றனர் என்றனர்.

    நகர மற்றும் கிராமப்புறங்களில் பான் பராக், குட்கா விற்பனை செய்வோர் குறித்து விவரங்களை போலீசார் தெரிந்து வைத்திராமல் இல்லை. எங்கு எந்தெந்த வகையில் அவர்கள் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை உள்ளூர் போலீசார் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே ரோந்து போலீசார், தங்கள் எல்லைக்குள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதற்கான உத்தரவை உயரதிகாரிகள் பிறப்பித்தால் குற்றம் வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டில் கல்வி கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறுகையில், ‘‘எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் கல்வி கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு கல்வி கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ளது’’ என்றார்.



    கட்டண உயர்வுக்கு பிறகும் கூட தற்போதுள்ள கட்டணம் மற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை விடவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைவிடவும் குறைவாகத்தான் உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய கட்டணத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுய உதவி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் மற்ற பல்வேறு படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. இதே போல பாதுகாப்பு மற்றும் ஆய்வகத்தில் பல்வேறு வசதிகளை செய்தல் போன்றவற்றாலும் செலவுகள் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய நிதியை 2012-2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்திவிட்டது.

    தற்போது உயர்க்கல்வித்துறை உதவியுடன் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி நெல்லை, கோவை, மதுரை மண்டலங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
     
    இவ்வாறு அவர்கள் கூறினர். #AnnaUniversity
    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துகாணப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து அலைமோதுகிறது.

    நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 78,630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 32,158 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் மையத்தில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ரூ.2 கோடியே 86 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. #TirupatiTemple
    புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

    அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

    ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

    வரத்து குறைவால் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இடைய கோட்டை, அம்பிளிக்கை, முத்து நாயக்கன்பட்டி, கேதையறும்பு, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக வரத்து நின்றதால் இந்த கிராமங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படவில்லை.

    இதனால் மலை கிராமங்களான பால்கடை, வடகாடு, பாச்சலூர், பெத்தேல்புரம், பெரியூர் ஆகிய கிராமங்களில் இருந்தே தக்காளி கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இது சராசரி வரத்தை விட மிகவும் குறைவு ஆகும்.

    இதனால் விலையும் அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.400 முதல் ரூ.420 வரை விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி என பல்வேறு ஊர்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக அப்பகுதி வியாபாரிகள் பெங்களூர், மதனபள்ளி, உடுமலைப்பேட்டை, பழனி, சிந்தாமணி போன்ற பல்வேறு ஊர்களுக்கு சென்று தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

    சிந்தாமணியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், பழனியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், உடுமலைப்பேட்டையில் ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.410 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலை கிராம விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

    அக்னி நட்சத்திரம் தொடங்க 10 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் வேலூரில் நேற்று அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. #SummerHeat
    வேலூர்:

    தமிழகத்தில் பருவமழை தவறியதையடுத்து கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கோடை தொடங்கியதும் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தியது.

    கடந்த 3 நாட்களாக வெயிலின் டிகிரி 105 டிகிரியை தாண்டிய நிலையில் நேற்று 107.6 டிகிரியாக சுட்டெரித்தது. தகித்த வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

    வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. குளிர்பான கடைகளிலும், இளநீர் கடைகளிலும், கரும்புச்சாறு, பழரச கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    அப்படி வெளியில் நடமாடினாலும் குடைகளுடன் செல்வதுடன், அடர்த்தியான வண்ணம் கொண்ட நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும்.

    அதிகளவில் நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்பத்தாக்குதல் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்தும், கோடைகால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.   #SummerHeat



    தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது. #Summer
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.

    வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வெயில் அளவு அதிகரித்து, மே மாத இறுதியில் உச்சத்தை தொடும். அந்த சமயத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.

    காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சம் அடைகிறது. கடுமையான வெயில் அனல் காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வேலூரில் நேற்று வெயிலின் அளவு இதுவரை இல்லாத வகையில் 106.5 டிகிரி கொளுத்தியது. இதனால் வேலூரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    பகலில் அடித்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்தது. மின்விசிறிகள் அனல்காற்றை கக்கியது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது.

    கரூர் பரமத்தியில் 105 டிகிரியும், மதுரை விமான நிலையம், மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் 103 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வாட்டியுள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் இன்று வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

    குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #Summer

    மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
    மதுரை:

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

    அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.

    புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.

    மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.

    வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
     
    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை என்பதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. #PlasticBan
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. சிறுவியாபாரிகளும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தினர்.

    ஆனால் அதன்பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. இதனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சுற்றுலா இடங்களுக்கு செல்ல வத்தலக்குண்டு முக்கிய சந்திப்பு என்பதால் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவது இல்லை. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு குறைந்ததால் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவியத்தொடங்கியுள்ளன. பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது.

    எனவே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுவியாபாரிகளை குறிவைக்காமல் மொத்தமாக தயாரிக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #PlasticBan

    ×