கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு

சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 22 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com