search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car crash"

    • தோஷியும், அமிதாவும் காரில் அம்பாஜி கோவிலுக்கு சென்று திரும்பினர்
    • காயங்களுடன் காரிலிருந்து வெளியேற முடியாமல் அமிதா சிக்கி கொண்டார்

    குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பரேஷ் தோஷி. இவரது மனைவி அமிதா.

    பரேஷ் தோஷி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன் தோஷி, தனது மனைவி அமிதாவுடன், காரில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திரும்பி வரும் வழியில், சபர்காந்தா பகுதியில், தான் மஹுதி கிராமத்தில் கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அவர்கள் காரின் குறுக்கே ஒரு நாய் வந்தது.


    அந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க தோஷி காரை திருப்பிய போது, அது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தூண்கள் மற்றும் சாலை தடுப்புகளிலும் மோதியது.

    அப்போது சாலை தடுப்புகளில் ஒன்று அவர்களது கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அமிதாவை தாக்கியது. இதில் காரிலிருந்து இறங்க முடியாமல், பலத்த காயங்களுடன் அமிதா சிக்கித் தவித்தார்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், விபத்தை கண்டு உதவ ஓடி வந்தனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே அமிதாவை வெளியே மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அமிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற தோஷி, கவனக்குறைவாக கார் ஓட்டிய குற்றத்தை புரிந்ததாக தனது பெயரிலேயே முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து கொண்டார்.

    ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களால், பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், காலையில் நடைபயிற்சி செய்வதும் கடினமாகி வருவதாக, கடந்த வருடம், அம்மாநில உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கார் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த செல்வராஜை. அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிளாவடி நத்தம் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் எரியாத தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்து கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    • தாயும் மகனும் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது
    • இறுதி சடங்கிற்கு நண்பரின் காரில் புறப்பட்டார் மற்றொரு மகன்

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராணி தேவி (55).

    இவரது கணவர் பல வருடங்களுக்கு முன் காலமானார். இவருக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

    உத்தரபிரதேச எல்லைக்கு அருகே ரேவா மாவட்டத்தில், ஜாத்ரி கிராமத்தில் தன் மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார்.

    ராணி தேவி தன் தாய் வீட்டிற்கு செல்வதற்காக தனது ஒரு மகன் ஸன்னியுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வீட்டிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தபோரா எனும் இடத்தில் அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது ஒரு மோட்டார் சைக்கிள் வந்து மோதியது.

    இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவர்களை 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனையடுத்து அவரை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராணி தேவி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

    இந்த செய்தியை கேள்விப்பட்ட இந்தூரில் வசித்து வந்த ராணி தேவியின் மற்றொரு மகன் சூரஜ் மிகவும் அதிர்ச்சியடைந்தார். துக்கம் தாங்காமல் தாயின் முகத்தை இறுதி முறையாக காண, தனது நண்பர் அபிஷேக் சிங்குடன் காரில் ஒரு ஓட்டுனருடன் தாயின் இறுதி சடங்கிற்காக சென்றனர்.

    ஆனால் சூரஜ்ஜின் சொந்த ஊருக்கு 100 கிலோ மீட்டர் முன்பாக சாட்னா மாவட்டத்தில் ராம்பூர் பகேலன் பகுதியில் அவர்களின் கார் விபத்திற்குள்ளானது. மூவரும் அங்கிருந்து ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சூரஜ் உயிரிழந்தார்.

    பின்னர், தாய், மகன் இருவரின் உடல்களும் ஜாத்ரி கிராமத்தில் எரியூட்டப்பட்டது.

    12-மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் உயிரிழந்து ஒரே நாளில் எரியூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
    • கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி.
    • இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வீரமணி (வயது 27). திருமணம் ஆகாத இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில், வீரமணி இன்று அதிகாலை வீராணம் மெயின் ரோடு சுக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிகண்டன் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
    • எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது.

    கடலூர்:

    புவனகிரி அருகே கூரை வீட்டிற்குள் கார் புகுந்து 3 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருேக உள்ள ஆதிவராக நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது. 

    இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டன் மனைவி அமாவாசை (80), தில்காலைக்கரசி (31), பிரவினா (18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ,இதனை பார்த்ததும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பண்ட் இடம்பெறவில்லை.
    • பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என விவிஎஸ் லஷ்மண் கூறியுள்ளார்.

    இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டரில் இதுகுறித்து கூறுகையில், பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், பண்ட் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


    25 வயதான பண்ட் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கார் மோதி முதியவர் பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கோமான் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் சுருதிமன்னன் (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பையன் உயிரிழந்தார். சுருதிமன்னன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கரூர் மாவட்டம் வச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் கிருபா(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்
    • இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.

    பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சின்னூர் பிரிவு அருகே, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அவர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி மகன் முருகேசன்( வயது 37) என்பது தெரியவந்தது . இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
    • தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    காங்கயம் :

    திருப்பூா் வீரபாண்டி, சபாபதி நகரை சோ்ந்தவா் முருகானந்தம் (வயது 66). இவா் திருப்பூா் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

    இந்நிலையில் கரூருக்கு காரில் சென்றுள்ளாா். காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் செல்லும்போது, காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக் கொண்டாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×