search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver death"

    • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.
    • திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் தி.புதுக்குப்பம் பள்ளிக்கூட குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது52). பொக்லைன் டிரைவர்.

    சக்திவேலுக்கு உஜ்வாலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவரது உறவினர் இல்ல திருமணம் இன்று காலை திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் சிவன் கோவிலில் நடைபெற்றது.

    திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சக்திவேல் திருமணம் முடிந்த பிறகு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கனூர் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது லாரியை முந்தி செல்ல முயன்ற போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சித்தலம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் அவரது வாகனத்தில் இடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நிலை தடுமாறிய சக்திவேல் லாரியின் மீது தவறி விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் சக்திவேல் மீது ஏறியதால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.

    திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 5-ந்தேதி இரவு பேரணியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேரணி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சித்தணியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அருள்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து செஞ்சியை சேர்ந்த பச்சமுத்து (20), சதீஷ்குமார் (23) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆட்டோ டிரைவர் அருள்குமார் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பாளை சீனிவாசநகர் மேம்பாலம் அருகே மாரி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த மாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள கீழ வெள்ளமடம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 40). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 10-ந்தேதி பாளை சீனிவாசநகர் மேம்பா லம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் லோடு கேரியர் ஆட்டோவில் கருவாடு ஏற்றுக்கொண்டு திண்டிவனம் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
    • பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில்ஆட்டோ ஓட்டிச்சென்ற ராஜி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜு (வயது 38). இவர் கூட்டேரிப்பட்டில் இருந்து லோடு கேரியர் ஆட்டோவில் கருவாடு ஏற்றுக்கொண்டு திண்டிவனம் நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த இமாம் காசிம் (50) என்பவரும் சென்றார்.

    திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் என்ற இடத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டிச்சென்ற ராஜி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற இமாம் காசிம் பலத்த காயமடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள் ளான வாகனத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்தை சீர் செய்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு கார்களும் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
    • ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழ ந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருதாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா (வயது 34) கார் டிரைவர்.நேற்று ஷேக் அப்துல்லா விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜி (61) என்பவரை புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். வடலூர் பெத்தநாயக் கன்குப்பம் விஷ்ணுகுமார் (27) என்பவர் தனது காரில் நண்பர் கஞ்சநாத ன்பேட்டையை சேர்ந்த அஜித் (24) என்பவருடன், வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரண்டு கார்களும் வடலூருக்கும், குறிஞ்சிப்பா டிக்கும் இடையே ஆண்டிக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஷேக் அப்துல்லா, ராஜி, விஷ்ணுகுமார், அஜித் ஆகிய 4 பேரும் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். காயம் அடைந்த ராஜி புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியிலும், விஷ்ணுகுமார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அஜித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்
    • இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.

    பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
    • தென்னிலை மீனாட்சி வலசு பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    கரூர்

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கரூரில் இறக்கிவிட்டு மீண்டும் கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தென்னிலை மீனாட்சி வலசு பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவசங்கர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தென்னிலை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம், துறையூரை சேர்ந்த துரைமுருகன் என்பவரை தென்னிலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வடவள்ளி

    கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் மருதாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

    வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை வரதராஜன் வழக்கம் போல வீட்டிற்கு சென்றார்.

    அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவிடம் கோபித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றார்‌.

    அப்போது மருதமலை நால்வர் நகர் அருகே வந்த போது மருதமலையில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பட்டை இழந்து வரதராஜன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, விபத்தில் இறந்து கிடந்த வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார்.
    • விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 27) மினிலாரி டிரைவர். இவர் நேற்று இரவு மினி லாரியில் விஜி விக்ரம் உள்ளிட்ட 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார். 

    அப்போது மங்கலம் அருகே விஜயா தனியார் ஓட்டல் எதிரே வந்தபோது மினி லாரிக்கு முன்னால் வந்த அரசு பஸ் மினி லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். . மேலும் மினிலாரியில் இருந்த 4 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்சப் இன்ஸ்பெக்டர்அரு ள்செல்வன் தலைமை யிலானபோலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அதே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • காரினை கிருஷ்ணகிரி கோப்பரேட் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் பாஷா ( 28) என்பவர் ஓட்டிச் சென்றார்
    • காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    திருச்சி :

    கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னா தனது மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தையுடன் வாடகை காரில் ஊர் திரும்பினார்.

    காரினை கிருஷ்ணகிரி கோப்பரேட் காலனி பகுதியைச் சேர்ந்த ஷேக் பாஷா ( 28) என்பவர் ஓட்டிச் சென்றார்.இந்தக் கார் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி உத்தமர் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியது.

    காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.இந்த இடுப்பாடுகளில் சிக்கிய சேக் பாஷா பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காரில் பயணித்த பிரசன்னா, மனைவி, ஐந்து வயது குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    நெல்லை அருகே டயர் வெடித்ததால் டிராக்டரில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.
    நெல்லை:


    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாச்சலபேரி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 45).

    இவர் இன்று காலை பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதிக்கு டிராக்டர் ஓட்டி வந்தார்.  தாழையூத்து அருகே வந்தபோது டிராக்டரின் டயர் வெடித்தது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் உயிர் தப்பிப்பதற்காக அந்தோணி டிராக்டரில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார்.

     இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×