களக்காடு அருகே மின் கம்பத்தில் கார் மோதி டிரைவர் பலி

களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
களக்காடு அருகே  மின் கம்பத்தில் கார் மோதி டிரைவர் பலி
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.

பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com