வடலூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி

இரண்டு கார்களும் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது.ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழ ந்தார்.
விபத்தில் சிக்கிய கார்கள் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
விபத்தில் சிக்கிய கார்கள் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் விருதாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா (வயது 34) கார் டிரைவர்.நேற்று ஷேக் அப்துல்லா விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜி (61) என்பவரை புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். வடலூர் பெத்தநாயக் கன்குப்பம் விஷ்ணுகுமார் (27) என்பவர் தனது காரில் நண்பர் கஞ்சநாத ன்பேட்டையை சேர்ந்த அஜித் (24) என்பவருடன், வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு கார்களும் வடலூருக்கும், குறிஞ்சிப்பா டிக்கும் இடையே ஆண்டிக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஷேக் அப்துல்லா, ராஜி, விஷ்ணுகுமார், அஜித் ஆகிய 4 பேரும் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். காயம் அடைந்த ராஜி புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியிலும், விஷ்ணுகுமார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அஜித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com