search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vadavalli"

  • 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.
  • செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.

  வடவள்ளி,

  கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று காலை தனியாருக்கு செந்தமான இடத்தில் பொக்லைன் கொண்டு ஆழமாக குழி தோண்டும் பணி நடைப்பெற்றது. அருகில் குடியிருப்பவர்கள் இது குறித்து கேட்ட பொழுது செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.

  இந்த தகவல் லட்சுமி நகர் குடியிருப்பு சங்கத்தினர் வாட்ஸ்அப் குழுவில் பரவியது. சம்பவ இடத்திற்கு சிறிது நேரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் வந்தனர். அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் அந்த பகுதி கிணறு இருந்த பகுதி எனவும், செல்போன் டவர் அமைத்தால் இங்கு வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் பறவைகள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

  மேலும் சம்பவ இடத்திற்கு வடவள்ளி போலீஸ் நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். தொடர்ந்து உடனடியாக பணியை நிறுத்த வேண்டும். நாளை வடவள்ளி காவல் நிலையம் , மாவட்டம் கலெக்டரிடம் புகார் மனு இப்பகுதி குடியிருப்பு சங்கம் சார்பாக கொடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். நடவடிக்கை எடுக்காத நிலையில் மறியலில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

  • வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கி ெசல்கின்றனர்.
  • கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.

  வடவள்ளி

  கோவை மருதமலை சாலையில் வடவள்ளி ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதி மருதமலை, தொண்டாமுத்தூர், இடையர்பா–ளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சந்திப்பாக உள்ளது.

  போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால் இங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நின்று செல்லும் வகையில், சிக்னல்களும் பொருத்தப்பட்டன.கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் பேனர் கலாசாரம் பெருகி வருகிறது.

  அந்த பேனர்களையும் சிக்னல்களை மறைத்தபடி வைக்கின்றனர். இதனால் எப்போது எந்த சிக்னல் விழுகிறது என்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடையும் நிலை உள்ளது.மேலும் அந்த பேனர்கள் ரவுண்டாவில் இருக்கும் மின்னொளி கம்பத்தில் சாய்ந்தபடி இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அந்த பேனர்கள் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயமும் காணப்படுகிறது.எனவே இவ்வாறான பேனர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை எடுத்துள்ளனர். 

  • கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
  • பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.

  வடவள்ளி:

  கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தூர் பாலம் அருகே நேற்று இரவு கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். அதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

  விசாரணையில் சதிஷ் என்பவர் பேரூராட்சி அனுமதி இன்றி கோழி கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.

  • 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது.
  • பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

  வடவள்ளி,

  கோவை வடவள்ளி மருதமலை அடிவாரம் வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

  கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் கழகம் வென்று வந்த சோதனைகளே...கழகம் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளே... என்னும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

  பட்டிமன்ற நிகழ்ச்சியை கழக தலைமை நிலையச் செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசினார்.

  கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ.,மாநகர் மாவட்ட கழக செயலாளர், அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

  அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., வால்பாறை தொகுதி அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியரும், செய்தி தொடர் பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், செய்தி தொடர்பாளர் வக்கீல் ஏ.எஸ்.மகேஸ்வரி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கழகம் வென்று வந்த சோதனைகளே என்னும் தலைப்பிலும், கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் கோவை சத்யன், ெபாதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம் ஆகியோர் கழகம் நிகழ்த்திகாட்டிய சாதனைகளே...என்னும் தலைப்பிலும் பேசினர்.

  பட்டிமன்றத்திற்கு நடுவராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் பொறுப்பேற்று நடத்தினார். முன்னதாக பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

  முடிவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான ஆர்.சந்திரசேகர் நன்றிகூறினார்.

  நிகழ்ச்சியில் கோவை மாநகர், வடக்கு, புறநகர் தெற்கு மாவட்டங்கள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  • உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு.
  • அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

  வடவள்ளி,

  கோவை மாவட்ட தி.மு.க செயலா ளர்கள் மாநகர் மாவட்டம் கார்த்திக், தெற்கு மாவட்டம் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டம் தொண்டா முத்தூர் ரவி ஆகியோர் கூட்டாக வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

  தி.மு.க துணை பொதுச்செ யலாளர் கனிமொழி எம்.பி. நாளை காலை கோவை வருகை தர உள்ளார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே ஒருங்கிணைந்த தி.மு.க நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரகழகம், பகுதி கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், ஒன்றிய கழகம் செயலாளர்கள், மண்டல் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், நிலைகுழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக் பொறுப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் தெரிகிறது.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கோவை

  கோவை வடவள்ளியை அடுத்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 49). இவர் வீரகேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், அ.தி.மு.க.வில் செயலாளராகவும் உள்ளார்.மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா (37). சேலை வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புனிதா சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

  அந்த கடனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் கடந்த சி ல நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இற ந்தார்.

  பின்னர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  வடவள்ளி

  கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் மருதாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.

  வரதராஜனுக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை வரதராஜன் வழக்கம் போல வீட்டிற்கு சென்றார்.

  அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவிடம் கோபித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றார்‌.

  அப்போது மருதமலை நால்வர் நகர் அருகே வந்த போது மருதமலையில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பட்டை இழந்து வரதராஜன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, விபத்தில் இறந்து கிடந்த வரதராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அரை மணிநேரம் மருதமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
  • ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

  கோவை:

  கோவை வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (29). இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

  இந்தநிலையில் செல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

  இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை தடாகம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26). பெயிண்டர். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  இந்தநிலையில் சந்தோஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

  மேலும் அவரது காலில் காயம் ஏற்பட்டு ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி கண்டித்தார்.

  இதனால் அவர் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக வீடுகளை நோட்டமிட்டவாறே அங்கேயே சுற்றி திரிந்தார்.
  • வாலிபரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  வடவள்ளி:

  கோவை வடவள்ளி அடுத்து மருதமலை ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.

  இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். முதலில் யாரோ உறவினர் ஒருவரை பார்க்க வந்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் நினைத்தனர்.

  ஆனால் வாலிபர் நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தார். மேலும் வீடுகளை நோட்டமிட்டவாறே சென்றார்.

  இதற்கிடையே குன்றக்குடி அடிகளார் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அந்த வாலிபர் புகுந்து விட்டார்.இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

  அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். பொதுமக்கள் சுதாரித்து கொண்டு மர்மநபரை பிடித்தனர்.

  பின்னர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

  அப்போது வாலிபர் போலீசாரை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து போலீசார் அவரை துரத்தி ெசன்று பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில், அந்த நபர் சுப்பிரமணியபுரம் ஜி.என்.மில் பகுதியை சேர்ந்த மனோகர்(வயது42) என்பதும், ஏற்கனவே இவர் மீது சாய்ப்பா காலனி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பதும், தற்போது ஐ.ஓ.பி.காலனி குடியிருப்பு வீட்டில் திருடும் நோக்கத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது ெசய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

  • 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம்.

   வடவள்ளி

  கோவை வடவள்ளி பகுதியில் கடந்த சில தினங்களாக 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கூட்டம் நடத்த போலீசார் கேட்டுக்கொண்டனர்.

  அதை தொடர்ந்து இன்று தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைவர் எஸ்.எம்.முருகன் அறிவுத்தலின் படி வடவள்ளி கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

  இந்த கூட்டத்தில் அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம், கடையின் முன்பு வெளிச்சம் அதிகமாக இருக்க விளக்கும் பொருத்த வேண்டும். சந்தேகம்படும் படி வெளியாட்கள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தரவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

  மேலும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டாம் , மீறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமை நிராகரி க்கப்படும் என்று வடவள்ளி போலீஸ் சப்-இன்ஸ்செ பெக்டர்கள் செந்தில்கு மார், முத்துகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இதில் வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் ஒய்.எ.ஜி.சேகர் உள்ளிட்ட சங்க வியாபாரிகள் கலந்து கொண்டனர்.