என் மலர்

  நீங்கள் தேடியது "Minister S.P. Velumani started it"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது.
  • பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

  வடவள்ளி,

  கோவை வடவள்ளி மருதமலை அடிவாரம் வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. 50-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

  கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் கழகம் வென்று வந்த சோதனைகளே...கழகம் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளே... என்னும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

  பட்டிமன்ற நிகழ்ச்சியை கழக தலைமை நிலையச் செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசினார்.

  கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ.,மாநகர் மாவட்ட கழக செயலாளர், அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

  அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., வால்பாறை தொகுதி அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியரும், செய்தி தொடர் பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், செய்தி தொடர்பாளர் வக்கீல் ஏ.எஸ்.மகேஸ்வரி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கழகம் வென்று வந்த சோதனைகளே என்னும் தலைப்பிலும், கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் கோவை சத்யன், ெபாதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம் ஆகியோர் கழகம் நிகழ்த்திகாட்டிய சாதனைகளே...என்னும் தலைப்பிலும் பேசினர்.

  பட்டிமன்றத்திற்கு நடுவராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் பொறுப்பேற்று நடத்தினார். முன்னதாக பட்டிமன்றத்தில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வழங்கினார்.

  முடிவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான ஆர்.சந்திரசேகர் நன்றிகூறினார்.

  நிகழ்ச்சியில் கோவை மாநகர், வடக்கு, புறநகர் தெற்கு மாவட்டங்கள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் , சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  ×