வடவள்ளியில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்
வடவள்ளியில் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
Published on

கோவை :

கோவை வடவள்ளி சின்மையா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32). இவர் பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த செயின் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

நேற்று வீட்டிற்கு திரும்பிய கந்தசாமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கந்தசாமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனையடுத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com