என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே கோழி இறைச்சி கடைக்கு சீல்
- கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
- பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தூர் பாலம் அருகே நேற்று இரவு கோழி கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய நபரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். அதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில் சதிஷ் என்பவர் பேரூராட்சி அனுமதி இன்றி கோழி கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரூராட்சி செயலாளர் ரமேஷ் குமார் கடையை பூட்டி சீல் வைத்தார்.
Next Story