விபத்துக்குள்ளான வாகனம்.. அடிபட்டவர்களை தவிக்கவிட்டு பாலை திருடிச் சென்ற மக்கள்

நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது.விபத்தில் உயிரிழந்த டிரைவர் பிரேம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம்.. அடிபட்டவர்களை தவிக்கவிட்டு பாலை திருடிச் சென்ற மக்கள்
Published on

"ஒருவரின் துரதிர்ஷ்டம் மற்றொருவருக்கு வாய்ப்பு" என்ற பழமொழிக்கேற்ப ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பால் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. ஏபிஇஎஸ் என்ஜினீயரிங் கல்லூரி அருகே நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்

இந்த விபத்தில் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. விபத்தை பார்த்த பலர் அடிபட்டவர்களை தவிக்கவிட்டு விட்டு டேங்கரில் இருந்து வெளியேறும் பாலை சேகரிக்கத் தொடங்கினர். விபத்திற்குள்ளான பால் டேங்கரை முற்றுகையிட்ட மக்கள் பாலை எடுத்துச்சென்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த டிரைவர் பிரேம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com